பாலியல் மற்றும் இனவிருத்திச் சுகாதார சேவை வழங்கலின் அணுகும் தன்மை மற்றும் தரத்தினை முன்னிறுத்துவதற்கு தமது வாடிக்கையாளர்களுக்கு பரந்தளவிலான பாலியல் மற்றும் இனவிருத்திச் சுகாதார சேவைகளை குடும்ப சுகாதாரத்திற்கான நிலையம் வழங்குகின்றது
வழங்கப்பட்ட சேவைகள்:
குடும்பத் திட்டமிடல் சேவைகள்
திட்டமிடப்படாத / விரும்பத்தகாத கர்ப்பம் தரித்தல் ஆபத்தினை குறைப்பதற்கு கருத்தடையின் பொருத்தமான முறைகளை பின்பற்றுவதற்கு திருமண அந்தஸ்து எதுவாக இருந்தாலும் அனைவருக்கும் கருத்தடை ஆலோசனைகள் மற்றும் சேவைகள்
சிகிச்சை நிலையத்தில் கிடைக்கும் முறைகள்
தற்காலிக
ஹோர்மோன்சார்: வாய் மூல மாத்திரை (OCP - மித்துரி), உட்பதித்தல்கள் - ஜெடெல் (5 வருடங்கள்) மற்றும் 3 மாதத்திற்கு ஒருமுறை ஊசிகள் - டேபோ புரொவெரா
ஹோர்மோன்சாரா: செம்பு உள்ளடக்கிய உள்ளக கருவி சாதன வளையம் (10-12 வருடங்கள்), லெவொன்ஜெஸ்ரல் ஹோர்மேன் உள்ளடங்கிய உள்ளக கருவி முறைமை – மிரேனா (5 வருடங்கள்) மற்றும் ஆணுறைகள்
எஸ்.ரி.ஐ / எச்.ஐ.வி சேவைகள்
எஸ்.ரி.ஐ எவ்வாறு பரவும் மற்றும் எவ்வாறு பரவாது, உங்களை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் எஸ்.ரி.ஐ. / எச்.ஐ.விக்கான பரிசோதனைகள் தொடர்பான கலந்தாலோசனைகள். சைபிளிஸிற்கான அனைத்து பரிசோதனைகள் - சிகிச்சை நிலையங்களில் நடைபெறும் VDRL, ஹேர்பஸ் - HSV, எச்.ஐ.வி மற்றும் மூளையழற்சி பி
வைத்தியர்களால் நடத்தப்படும் பரிசோதனைக்கு முன்னரும், பின்னருமான உளவளத்துணை. அனைத்து சந்தர்ப்பங்களிலும் இரகசியத் தன்மையும், அந்தரங்கமும் பேணப்படும்.
தேவையான சந்தர்ப்பங்களில் பரிசோதனையின் போதான அனாமேதயத் தன்மையும் பாதுகாக்கப்படும்.
உடல் பரிசோதனைகள் - ஆண் மற்றும் பெண்
மார்பு பரிசோதனை- ஆபத்து காரணிகள் மற்றும் அதனை எவ்வாறு தவிர்ப்பது என்பது பற்றிய கலந்தாலோசனைகள். பெண் வைத்தியர்களினால் மார்பு பரிசோதனை மற்றும் சுய மார்பு பரிசோதனை என்பன கற்பிக்கப்பட்டு, ஊக்குவிக்கப்படுகின்றன. ஏதேனும் நோயியலை இல்லாது செய்வதற்கு பரிசோதனைகள் மற்றும் முலை ஊடுகதிர் பரிசோதனைகளுக்கான ஆற்றுப்படுத்தல்.
கர்ப்பப்பை வாய் பரிசோதனை- பாலியல் ரீதியாக செயற்றிறன் மிக்கவராகவும், 21 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருப்பின் பெப் ஸ்மியர் பரிசோதனை. சிறிதளவு நேரமே எடுக்கும் ஒரு எளிய நடைமுறையாகும். கர்ப்பப்பையில் உயிரணுக்களில் ஏதேனும் மாற்றங்களை கண்டறிய பயனுள்ளது.
புரொஸ்டேட் பரிசோதனை – அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் தொடர்பான விளக்கமான கேள்விகள். தேவையாயின், மலக்குடல் பரிசோதனைகள் மற்றும் புரொஸ்டேட் சிறப்புடைய அன்டிஜன் (PSA) பரிசோதனை.
ஏனைய பரிசோதனைகளில் உள்ளடங்குவன
• விரிவான வரலாற்றை பதிதல்
• பொதுவான உடற்பரிசோதனை (இதயம் / நுரையீரல் / வயிறு)
• கண் பரிசோதனை
• உடல் தகுதி சுட்டெண் (BMI)
• இரத்த அழுத்த பரிசோதனை
• ஆய்வுகூட பரிசோதனைகள்
பாலியல் மற்றும் பால்நிலைசார் வன்முறை சேவை தொடர்பான உளவளத் துணை:
பாலியல் மற்றும் பால்நிலை சார் வன்முறையினால் பாதிக்கப்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களின் தேவைகளை எட்டுவதற்கு வைத்தியர்கள் மற்றும் உளவள ஆலோசனை வழங்குபவர்களுக்கு பயிற்சி அளித்தல். சட்ட ஆலோசனை மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு பரிசோதனை செய்தல். உளவளத்துணை வழங்கல் மற்றும் குறிப்புதவி வழங்கலை நாம் செய்கின்றோம்.
முகாமைத்துவச் செயற்பாட்டின் ஊடாக இரகசியத் தன்மை மற்றும் அந்தரங்கத் தன்மையைப் பேணல்.
பாலியல் சுகாதார சிகிச்சை நிலையம்
மலட்டுத்தன்மை, முன்கூட்டிய விந்து வெளியேற்றம், பாலியல் ஆர்வம் குறைவு பாலியல் உடலுறவின் போது வலி மற்றும் வேறு பல பிரச்சினைகள் உள்ளடங்கலாக பாலியல்பு சார் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளவர்கள் அனைவருக்கும் இந்த சிகிச்சை நிலையம் சேவைகளை வழங்குகின்றது.
முன்கூட்டியே அனுமதி பெறுவதன் மூலம் வெள்ளிக்கிழமைகளில் சிகிச்சை நிலையத்தில் நீங்கள் வைத்தியரை கலந்தாலோசிக்கலாம் அல்லது சிகிச்சைப் பெறலாம்.
பரிசோதனை வசதி
உங்களுடைய இடுப்புத் தொடை நரம்பு, வயிறு, பெண்ணுறுப்பு, மார்பு, கருவளம் மற்றும் கரு பரிசோதனைகளை செய்து கொள்வதற்கு வியாழக்கிழமைகளில் கதிரியக்க சேவைக்கான முன் அனுமதி பெறுங்கள்.
துணை கருவள சேவைகள்
கருவள தினங்களில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் (மருந்துகள் அல்லது ஊசிகள்) என்பது தொடர்பில் கர்ப்பம் தரித்தலுக்கு முன்னரான உளவளத்துணை.
நுண்ணறை தடம்தொடரல், மருந்தின் மூலம் கருப்பை தூண்டல், விந்தணு பகுப்பாய்வு (SFA)> குழாய் கர்ப்பம் தரித்தல் பரிசோதனைகள் மற்றும் உள்ளக கருவி பொதித்தல் உள்ளடங்கலாக கருவள பரிசோதனை, கருவள நாட்கள் தொடர்பான விழிப்புணர்வை வழங்குவதன் மூலம் துணை கருவள பிரச்சினை கொண்ட தம்பதியினருக்கும் நாம் சேவைகளை வழங்குகின்றௌம்.
விசேட ஆலோசனைகளை வழங்கக் கூடிய இரண்டு முன்னணி மகப்பேற்றியல் நிபுணர்களால் இந்த சிகிச்சை நிலையத்திற்கு ஆதரவு அளிக்கப்படுகின்றது.
மகப்பேற்றியல் சேவைகள்
மாதவிடாய் பிரச்சினைகள், பெண் பிறப்புறுப்பு வெளியேற்றல், மாதவிடாய் விடயங்கள், சிறுநீர் பிரச்சினைகள், வயிற்று வலி என்பவற்றுக்கு உதவிநாடிகளுக்கு நாம் ஆலோசனை வழங்குகின்றோம்.
வேறு சேவைகள்
• ஆய்வுகூட வசதி
• மருந்தகம்
• பாலியல் மற்றும் இனவிருத்திச் சுகாதாரம் தொடர்பான செயலமர்வுகளையும், விரிவுரைகளையும் முன்னெடுத்தல்
• பால்நிலை அடையாளப் பிரச்சினைகள் அல்லது பாலியல் அமைப்புக்களில் பிரச்சினை உள்ளவர்களுக்கான சேவை
• உங்களுடைய பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதாரச் சேவைகளின் முழுமையான பராமரிப்புக்கு எம்மை விஜயம் செய்யுங்கள்
பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதார தகவல் மற்றும் சேவைகள் வழங்கப்படாத, வறிய மற்றும் இளைஞர்களின் தேவைகளை எட்டுவதற்கு இலங்கை குடும்பநலத் திட்டச் சங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது. நேரடியாக வழங்கல் அல்லது வயது, பால், திருமண அந்த்து, கொடுப்பதற்கான ஆற்றல், இன ப+ர்வீகம், அரசியல் மற்றும் மத நம்பிக்கை, மாற்றுத்திறன், பாலியல் அமைப்பு, சுகாதார நிலைமை அல்லது பாரபட்சத்தின் இலக்காக ஒருவரை மாற்றும் வேறு காரணிகள் பற்றிய பாரபட்சமின்றி பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதார தகவல், கல்வி, சேவைகள் மற்றும் பயிற்சிகளுக்கான ஆற்றுப்படுத்தல் மூலம் அணுகும் வசதியை அளிக்கின்றது.
சிகிச்சை நிலையத்தை கண்டறிதல்.
தொடர்பு விபரங்கள்
குடும்ப நல நிலையம் (CFH).
37/27 புல்லர்ஸ் ஒழுங்கை, கொழும்பு 7.
தொலைபேசி: +94 11 2 555 455 / +94 11 2 588 488
0779552979