இளைஞர் தொழில்நுட்ப மதியுரைக் குழு (YTAC) என்பது இளம் வயதினரின் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார உரிமைகளை (SRHR) விரும்புகிற இளைஞர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இலங்கை குடும்பத்திட்ட சங்கத்தின் இளம் தொண்டர்களுக்கிடையிலிருந்து இரண்டு வருட காலப்பகுதிக்கு இவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். இளைஞர் தொழில்நுட்ப மதியுரைக் குழு (YTAC) தற்பொழுது மட்டக்களப்பு, மான்குளம், அம்பாறை, கொக்கல, நுவரெலியா, மருதானை ஆகிய சேவை வழங்கும் நிலையங்களிலிருந்தும் அவற்றைச் சுற்றியிருந்தும் வருகின்ற இளைஞர் குழுவுடன் தற்பொழுது தொடர்பு கொண்டிருக்கிறது. இளைஞர் தொழில்நுட்ப மதியுரைக் குழு (YTAC) வின் பிரதான பாத்திரம் சங்கத்தின் மூலோபாய வேலைகளுக்கு ஒரு உள்நோக்கத்தை அளிப்பதாகும். அத்துடன் வளரிளம் பருவத்தினரின் பிரதேசத்தில் நிகழ்ச்சித்திட்டங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் அவதானித்தல் மற்றும் இளைஞர்களை அடிப்படையாகக் கொண்ட செயல்நோக்கை இளைஞர்களிடையே உருவாக்குவதாகும். இளைஞர் தொழில்நுட்ப மதியுரைக் குழு (YTAC) ஓர் உரிமை என்ற வகையில் இளைஞர்களின் பாலியல் இனப்பொருக்க சுகாதாரத்தை மேம்படுத்துவற்கு வருடம் முழுவதிலும் தன்னார்வத்தொண்டு பணிகளிலும் ஈடுபடுகிறது. அத்துடன் ஏனைய பிரச்சினைகள் குறிப்பாக எச்.ஐ.வி, பால்நிலையை அடிப்படையாகக் கொண்ட வன்முறை என்பவற்றிற்கும் ஓரங்கட்டப்பட்ட சமூகத்தின் உரிமைகளுக்காகவும் பரிந்துரைக்க ஏனைய நிறுவனங்களுடன் வலையமைப்பை அமைத்திருக்கிறது. திட்டமிட்ட பெற்றோர் ஒன்றியத்தின் (IPPF) தெற்காசிய பிராந்திய இளைஞர் வலையமைப்பின் ஒரு பகுதியாக இருக்கின்றபோது இளைஞர் தொழில்நுட்ப மதியுரைக் குழு (YTAC)பிராந்திய மற்றும் சர்வதேச கூட்டங்களில் இலங்கை குடும்பத்திட்ட சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.