சுகாதாரப்பராமரிப்பு சேவை வழங்கல் மற்றும் பரிசோதனை
புற்றுநோய் பரிசோதனைக்கான நோயறிதல் மற்றும் சிகிச்சை முறைகள், மகப்பேறு மற்றும் மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகள் உட்பட பலதரப்பட்ட பெண்களின் சுகாதார சேவைகளை நாங்கள் வழங்குகிறோம். எமது சேவைகள் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் (STI) / HIV பரிசோதனை மற்றும் சிகிச்சை, பாலியல் செயலிழப்புக்கான/பிறழ்ச்சிக்கான சிகிச்சை மற்றும் பலவிதமான நுட்பமான சோதனைகள்/ஸ்கேன்கள் (விதைப்பை, அடிவயிறு, யோனிவழி, மார்பகம், கருவுறுதல் மற்றும் கரு) உட்பட பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் சார்ந்த சேவைகளை உள்ளடக்குகின்றன. நாங்கள் மார்பக புற்றுநோய், கர்ப்பப்பைவாய் புற்றுநோய் மற்றும் முன்னிற்கும் சுரப்பி புற்றுநோய்க்கான பரிசோதனைகளையும் வழங்குகிறோம், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வடிவமைக்கப்பட்ட சேவை மற்றும் முழுமையான கவனிப்பை நாம் உறுதி செய்கிறோம்.
பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் மீதான கொள்கை மேம்பாட்டு நடவடிக்கை
பால்நிலை, பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் மாதவிடாய் சுகாதாரம் ஆகிய விடயங்களில் கவனம் செலுத்தி, பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார உரிமைகளுக்காக பரிந்துரைகளை வழங்குவதற்கு FPA தன்னை அர்ப்பணித்துள்ளது. களங்கம் மற்றும் பாகுபாட்டைக் குறைப்பதற்கும், சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கும், பாலியல் சிறுபான்மையினர் உட்பட அனைத்து சமூகங்களுக்குமான பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகளை மேம்படுத்த கொள்கை வகுப்பாளர்களை ஈடுபடுத்துவதற்கும் நாங்கள் பணியாற்றுகிறோம். மேலதிகமாக, இலங்கையில் உலகளாவிய காலமுறை மீளாய்வு (UPR) செயன்முறையை நாம் பலப்படுத்துகிறோம். குறிப்பாக LGBTIQ உரிமைகள் தொடர்பாக, ஒப்புரவான மற்றும் சமத்துவமான கொள்கைகள் மற்றும் நடைமுறைகளுக்காக பரிந்துரைகளை வழங்குகிறோம்.
பால்நிலை நீதி மற்றும் மாதவிடாய் சமத்துவம்
பெண்களுக்கெதிரான வன்முறையை நிலைநிறுத்தும் சமூக எண்ணங்கள், மனப்பாங்குகள் மற்றும் நம்பிக்கைகளுக்கு சவால் விடுவதன் மூலம் பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிராக போராட நாங்கள் முயற்சிக்கிறோம். இதற்கு மேலதிகமாக, சிவில் சமூக அமைப்புகளுடன் இணைந்து மாதவிடாய் வறுமை மற்றும் களங்கம் என்பவற்றை நிவர்த்தி செய்வதற்கு FPA தன்னை அர்ப்பணித்துள்ளது. எமது முயற்சிகள் மூலம், அனைத்து தனிநபர்களுக்கும் மிகவும் சமத்துவமான மற்றும் நியாயமான சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
ருத்தடை சாதனங்களின் அணுகல் மற்றும் விநியோகம்
FPA ஆனது அதன் சேவை விநியோக நிலையங்கள் (SDPs) மற்றும் மருந்தகங்கள், மருத்துவ சிகிச்சை நிலையங்கள், வைத்தியசாலைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள்/ கடைகள் உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள வர்த்தகர் வலையமைப்பு ஊடாக பல்வேறு வகையான உயர்தர கருத்தடை தயாரிப்புகளின் கிடைப்பனவினை உறுதிப்படுத்துகிறது.
சமூக ஈடுபாடு மற்றும் விதிமுறை மாற்றம்
FPA இல், பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் சுற்றியுள்ள பாரம்பரிய விதிமுறைகள் மற்றும் அணுகுமுறைகளுக்கு சவால் விடுவதற்கு சமூகத் தலைவர்கள், நிறுவனங்கள் மற்றும் இளைஞர்களுடன் நாம் தீவிரமாக செயற்பட்டு வருகிறோம். பாதுகாப்பற்ற கருக்கலைப்பு நடைமுறைகளை ஒழிப்பதற்காக வாதிடுவது, கருக்கலைப்பு சட்டங்களை தாராளமயமாக்குவதை ஊக்குவித்தல் மற்றும் LGBTIQ+ சமூகத்திற்கு எதிரான களங்கம் மற்றும் பாகுபாட்டை எதிர்த்துப் போராடுவது ஆகியவை நாம் கவனம் செலுத்தும் பகுதிகளில் அடங்கும்.
பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் /HIV தடுப்பு மற்றும் சிகிச்சை
FPA ஆனது சுகாதார அமைச்சுடன் இணைந்து, முக்கிய மக்கள் தொகைக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சுகாதார சேவைகளுக்கான அணுகலை உறுதிப்படுத்துவதற்காக பணியாற்றி வருகின்றது. மேலும், எங்கள் சேவைகளில் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் (STIs) மற்றும் HIV க்கான விரிவான பரிசோதனை மற்றும் சிகிச்சை ஆகியவை அடங்கும்.
மனிதாபிமான உதவி
நெருக்கடி காலங்களில் மற்றும் நெருக்கடிக்குப் பின்னரான சூழ்நிலைகளில், பாலியல் மற்றும் இனப்பெருக்கம் மேம்படுத்துவதற்காக FPA தனது ஆதரவை விரிவுபடுத்துகிறது. தேவைப்படுபவர்களுக்கு அத்தியாவசிய சேவைகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக மனிதாபிமான பணியாளர்கள் மற்றும் முதல் பணியாளர்களின் திறனை வளர்ப்பதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.
கல்வி மற்றும் விழிப்பூட்டல் நிகழ்ச்சித்திட்டங்கள்
விரிவான பாலியல் கல்வி மற்றும் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை விருத்தி செய்து நடைமுறைப்படுத்துவதற்காக அரசாங்கத்துடனும் ஏனைய தரப்பினருடனும் FPA நெருக்கமாக இணைந்து செயற்படுகின்றது. இந்த முயற்சிகள் இளைஞர்கள், பொது மக்கள், ஏற்றுமதி செயலாக்க வலயங்களில் (EPZs) உள்ள தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் உட்பட பல்வேறு மக்கள் குழுக்களை இலக்காகக் கொண்டுள்ளன.
ஆலோசனை பராமரிப்பு மற்றும் டிஜிட்டல் சுகாதார மேம்பாட்டு நடவடிக்கை
FPA இல், நாங்கள் நேரடியாக மற்றும் நிகழ்நிலையில் என இரண்டிலும் பலவிதமான ஆலோசனை சேவைகள் மற்றும் உளவியல் ஆதரவை வழங்குகிறோம். நிகழ்நிலை தளங்கள் மூலம், தனிநபர்கள் தங்கள் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் தொடர்பான தேவையான பராமரிப்பு மற்றும் தகவல்களை அணுகலாம். மேலதிகமாக, பாலின அடிப்படையிலான வன்முறையை அனுபவித்த தனிநபர்களுக்கு, சட்ட மற்றும் மருத்துவ சேவைகளை அணுகுவதற்கான ஆதரவுடன் பரிசோதனை, ஆலோசனை மற்றும் பரிந்துரை சேவைகளை நாங்கள் வழங்குகிறோம். குடும்பத் திட்டமிடல், பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் (SRH), கருக்கலைப்பு மற்றும் பிற தொடர்புடைய சேவைகள் பற்றிய விரிவான ஆலோசனைகளை எங்கள் நிலையம் வழங்குகிறது.
சர்வதேச திட்டமிட்ட பெற்றோர் கூட்டமைப்பு (IPPF) அறிவுத்திறன் மையம்
சர்வதேச திட்டமிட்ட பெற்றோர் ஒன்றியம் (IPPF), வருமானத்தை உருவாக்குதல், நிதி மூலங்களை பல்வகைப்படுத்தல் மற்றும் முக்கியமாக நிறுவன மற்றும் நிதியியல் நிலைபேறான தன்மையை எய்துதல் ஆகிய நோக்கங்களுக்காக சமூக நிறுவன நடவடிக்கைகளை விருத்தி செய்வதற்கு அங்கத்துவ சங்கங்களுக்கு ஆதரவளிப்பதற்கு தன்னை அர்ப்பணித்துள்ளது.
FPA இலங்கையானது சமூக தொழில் முயற்சி மையமாக செயற்படுவதுடன், சமூக பெறுமதிகளை வழங்குதல் மற்றும் வாழ்க்கையை மேம்படுத்தும் அதேவேளை, சுகாதாரத் துறையில் தொழில் முயற்சியாளர்களின் சிறந்த நடைமுறைகளைப் பிரயோகிப்பதற்கான அங்கத்துவ சங்கங்களின் ஆற்றலை வலுப்படுத்துவதை இலக்காகக் கொண்ட சமூக தொழில் முயற்சி துரிதப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டத்தின் (SEAP) பொறுப்பாக உள்ளது. சர்வதேச திட்டமிட்ட பெற்றோர் ஒன்றியம் (IPPF) அங்கத்துவ சங்கங்களின் சமூக தொழில்முயற்சிகளை நிறுவுவதற்கும், அதன் வளர்ச்சிக்கும் சமூக தொழில் முயற்சி துரிதப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம் (SEAP) ஆதரவளித்துள்ளது.