வாழ்க்கை என்பது தனிப்பட்ட ரீதியான, தொழில்முறை ரீதியான, சமூக சூழல்கள் சார்ந்ததான சவால்கள் மற்றும் இன்னல்கள் நிறைந்தது. இவற்றில் ஒரு சில மனிதர்கள் ஒவ்வொரு சவாலையும் அல்லது அதனால் ஏற்படும் பின்னடைவையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்கின்றார்கள். எனினும் ஒரு சில இடங்களில் நமக்கு கூடுதலான ஆதரவு தேவைப்படும். அவ்வாறான நிலையில் அக் கூடுதலான ஆதரவு நமக்கு கிடைக்குமாயின் இவற்றை நாம் சாத்தியமானதொன்றாக மாற்ற முடியும்.
உங்கள் அன்றாட வாழ்வை பாதிக்ககூடிய கோபம், அவமானம் , குற்ற உணர்வு , சோகம் மற்றும் தனிமை போன்ற தீவிர உணர்வுகளை நீங்கள் உணருகின்றீர்களா?
மேலும் நாம் நம்மை வேலை மன அழுத்தம் , வேலை இழப்பு , உறவொன்றில் சிக்கிக்கொண்டதாய் உணரும் உணர்வு, சலிப்பு மற்றும் குறைந்தளவான ஊக்கத்தின் மூலம் தொடர் வன்முறையை சமாளிப்பது போன்ற விடயங்களில் நம்மை நாம் கையாண்டுகொண்டிருப்பதை வழக்கப்படுத்திக் கொண்டுள்ளோம். நீங்கள் கடந்த காலங்களில் அனுபவித்த வலி அல்லது அதிர்ச்சிகரமான அனுபவங்கள் இப்போது உங்கள் வாழ்க்கையை பாதிக்கின்றதா?
உங்கள் அன்றாட வாழ்வை பாதிக்ககூடிய கோபம், அவமானம் , குற்ற உணர்வு , சோகம் மற்றும் தனிமை போன்ற தீவிர உணர்வுகளை நீங்கள் உணருகின்றீர்களா?
அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அறிவு மற்றும் புரிதலுடன் இவ்வாறான சூழ்நிலைகளையும் , உணர்வுகளையும் நீங்கள் கையாண்டுகொண்டிருக்க முடியும். இருப்பினும் தொழில்முறையான உத்திகள் இந்த சிக்கல்களை புறநிலையாகவும் மற்றும் திறம்பட சமாளிக்கவும் உதவிப்புரியும். எனவே இவ்வாறான ஓர் ஆதரவைத் தேடிப்பெறுவது சிறந்த ஓர் படிமுறையாகும்.
ஆலோகய உளவல ஆலோசனை மையமானது உங்கள் இடர்களை மனந்திறக்கவும் , உங்கள் விருப்பங்களை தெளிவுப்படுத்தவும், மற்றும் சிறப்பான சிகிக்சை முறைகளை பயன்படுத்தி வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நீங்கள் வழங்கும் அனைத்து தகவல்களின் ரகசியத்தன்மையையும் பாதுகாப்பது எம் கடமையாகும்.
எங்கள் தொழில்முறை உளவல ஆலோசகர்களுடன் கலந்துரையாட
தொடர்பு கொள்ளுங்கள் -
திருமதி . ஹேமா ரணவக்
உதவி இயக்குனர்
ஆலோகய உளவல ஆலோசனை மையம்
37/27 புல்லர்ஸ் லேன் , கொழும்பு 7
மின்னஞ்சல் முகவரி : hemar@fpasrilanka.org
கையடக்க தொலைபேசி எண் : 0779895252
தொலைபேசி : +94 11 2 584 157 Ext. 162