பாலியல் ஆரோக்கியம் என்பது எமது முழுமையான நல்வாழ்வின் ஒரு பகுதியாகும். ஆனால், பலர் உடலுறவின் போது வலி அல்லது பதட்டம் முதல் ஆசை அல்லது செயல்திறனில் உள்ள சிரமங்கள் வரை பெரும்பாலும் சொல்லப்படாத சவால்களை அனுபவிக்கின்றனர். யோனி இறுக்கம், விறைப்புத்தன்மை குறைபாடு, முன்கூட்டியே விந்து வெளியேறுதல் மற்றும் குறைந்த பாலியல் ஆசை போன்ற நிலைமைகள் பெரும்பாலானவர்கள் நினைப்பதை விட மிகவும் பொதுவானவை. மேலும் இவை உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை பாதிக்கலாம். இதிலொரு நல்ல விடயம் என்னவென்றால், சரியான புரிதல், வெளிப்படையான உரையாடல் மற்றும் தொழில்முறை ஆதரவுடன், இந்த சிக்கல்களை திறம்பட நிர்வகிக்கவும் சிகிச்சையளிக்கவும் முடியும். இது தனிநபர்களும், தம்பதிகளும் ஆரோக்கியமான, நம்பிக்கையான மற்றும் நிறைவான உறவை அனுபவிக்க உதவும்.