பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) என்பது பொதுவாக யோனி, குத மற்றும் வாய்வழி உடலுறவின் பொழுது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவுகின்ற நோய்த்தொற்றுகளாகும். அவை மிகவும் பொதுவானவை, மேலும் அவை உள்ள பலருக்கு எந்த அறிகுறிகளும் இருக்காது. சிகிச்சை எடுக்காமை, பாலியல் ரீதியாக பரவுகின்றநோய்களானது(STDs) கடுமையான உடல்நலப்பிரச்சினைகளுக்கு வழிவகுப்பதற்கு காரணமாக அமையும். ஆனால் நல்ல செய்தி/ விடயம் என்னவென்றால், பரிசோதிக்கப்படுவது ஒன்றும் பெரிய விடயமல்ல, ஏனெனில் பெரும்பாலான பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களுக்கு (STDs) சிகிச்சையளிப்பது எளிதாகும்.
உங்களுடைய உள்ளூர் இலங்கை குடும்ப கட்டுப்பாட்டு சங்க கிளினிக்/மருத்துவகூடம், தேசிய பாலியல் நோய்/எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டம்(NSACP) கிளினிக்குகள்/மருத்துவகூடங்கள், மற்றும் சமூக சுகாதாரகிளினிக்குகள்/மருத்துவகூடங்கள் அல்லது ஒரு தனியார் மருத்துவர் அலுவலகத்தில் பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களுக்காக(STDs) நீங்கள் சோதிக்கப்படலாம்
FPA Sri Lanka Happy Life Centre provides a safe space for you to talk.
Call or WhatsApp on 076 588 4881