எப்படி பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள் (STDs) தொடர்பான பரிசோதனை வேலை செய்கின்றது? | The Family Planning Association of Sri Lanka

எப்படி பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள் (STDs) தொடர்பான பரிசோதனை வேலை செய்கின்றது?

பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) தொடர்பான சோதனை விரைவானது, வலியற்றது மற்றும் சில நேரங்களில் இலவசமாகவும் கிடைக்கலாம். பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) தொடர்பான பரிசோதனையானது வழக்கமாக வழக்கமான மருத்துவத் தேர்வுகளில் சேர்க்கப்படுவதில்லை - நீங்கள் அதைக்கேட்க வேண்டும்.

 

In this section :

1. பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) தொடர்பான பரிசோதனைக்கு நான் என் மருத்துவரிடம் கேட்க வேண்டுமா?

2. எனக்கு என்ன மாதிரியான பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) தொடர்பான பரிசோதனைகள் தேவை என்று நான் எப்படி அறிந்துகொள்ள முடியும்?

3. நான் பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) தொடர்பான பரிசோதனையை செய்கின்ற பொழுது என்ன நடக்கும்?

4. எனக்கு ஒரு பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய் (STD) இருப்பது தெரிய வந்தால் நான் என்ன செய்ய வேண்டும்?

5. நான் பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களுக்கு(STDs) எங்கே பரிசோதிக்க முடியும்?

 

1. பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) தொடர்பான பரிசோதனைக்கு நான் என் மருத்துவரிடம் கேட்க வேண்டுமா?

 

பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) தொடர்பான சோதனையானது எப்பொழுதும் உங்களுடைய வழக்கமான பரிசோதனையோ அல்லது மகளிர் மருத்துவ பரிசோதனையின் ஒரு பகுதியாகவோ இருக்காது. எனவே பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) தொடர்பான பரிசோதனையை கேட்கவும். உங்களுடைய பாலியல்(sex) வாழ்க்கையை குறித்து உங்களுடைய தாதி அல்லது மருத்துவரிடம் நேர்மையாக இருங்கள், எனவே உங்களுக்கு எந்த பரிசோதனை சிறந்தது என்பதை கண்டறிய அவர்களால் உங்களுக்கு உதவ முடியும்.

பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) தொடர்பான பரிசோதனை பற்றி பேசுவது சங்கடமாக இருக்கலாம், ஆனால் வெட்கப்படாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். மருத்துவர்கள் எல்லாவற்றையும் பார்த்தும் கேட்டும் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பெரும்பாலான மக்கள் தங்களுடைய வாழ்க்கையில் ஒரு முறையாவது பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களுக்கு(STDs) ஆளாகின்றார்கள், மேலும் பரிசோதனை செய்ய வேண்டியது பொறுப்பான விடயம் ஆகும் - அதாவது நீங்கள் உங்களுடைய ஆரோக்கியத்தை நன்றாக கவனித்து வருகின்றீர்கள் என்பதை இது கருதுகின்றது.

நீங்கள் ஒரு தாதியிடம்(nurse) அல்லது மருத்துவரிடம் பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) தொடர்பான பரிசோதனையை கொண்டுவர சில வழிகள் இங்கே இருக்கின்றன:

நான் ஒருபொழுதும் பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களுக்காக(STDs) சோதிக்கப்படவில்லை. நான் அதனை செய்ய வேண்டுமா?

நீங்கள் எனது பரிசோதனைகளின் பொழுது ஏதேனும் பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களுக்காக(STDs) எப்பொழுதாவது என்னை சோதித்தீர்களா?

நான் எந்த பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களை(STDs) பற்றி கவனிக்க வேண்டும்? நான் சோதிக்கப்பட வேண்டுமா என்று நான் எப்படி அறிந்துகொள்ள முடியும்?

பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களை(STDs) பற்றி உங்களுடைய வழக்கமான மருத்துவரிடம்பேசுவதற்கு உங்களுக்கு சௌகரியம் இல்லையென்றால், நீங்கள் எப்பொழுதும் உங்களுடைய உள்ளூர் இலங்கை குடும்ப கட்டுப்பாட்டு சங்கம் (FPA) அல்லது தேசிய பாலியல் நோய்/ எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டம் (NSACP) கிளினிக்கிற்கு/ மருத்துவகூடத்திற்கு செல்லலாம்.

 

2. எனக்கு என்ன மாதிரியான பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) தொடர்பான பரிசோதனைகள் தேவை என்று நான் எப்படி அறிந்துகொள்ள முடியும்?


 

உங்களுக்கு என்ன சோதனைகள் தேவை என்பதை அறிந்துகொள்ள உங்களுடைய தாதி(nurse) அல்லது மருத்துவர் உங்களுக்கு உதவுவார்கள்.  நீங்கள் பின்வருவன பற்றி பேசுவீர்கள்:

● உங்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால்

● உங்களுக்கு அல்லது உங்களுடைய துணைவர்/துணைவிக்கு முன்னரே பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) இருந்திருந்தால்

● நீங்கள் உடலுறவு கொண்டவர்களின் எண்ணிக்கை

● நீங்கள் வைத்திருக்கும் பாலியல் தொடர்பு - வாய்வழி, குத, அல்லது யோனி உடலுறவு, அல்லது தோலில் இருந்து தோலுக்கு பிறப்புறுப்பு தொடர்பு அல்லது பாலியல் திரவங்களை கடந்து செல்வது போன்றவை

● நீங்கள் எவ்வளவு தடவை அடிக்கடி ஆணுறை போன்ற பாதுகாப்பை பயன்படுத்துகின்றீர்கள்

● நீங்கள் செய்கின்ற மற்ற விஷயங்கள் சில தொற்றுநோய்களை பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன. (ஊசிகளைப் பகிர்வது போன்றவை)

 

இது உங்களுடைய தாதிக்கு (nurse) அல்லது மருத்துவருக்கு உங்களுக்கு எந்த பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) தொடர்பான பரிசோதனைகள் மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பதை கண்டறிய உதவும். நீங்கள் அவர்களுடன் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், எனவே உங்களுக்கு தேவையான கவனிப்பை பெறலாம். வெட்கப்படாமல் இருக்க முயற்சி செய்யுங்கள்: உங்களுடைய மருத்துவர் உங்களுக்கு உதவ இருக்கின்றார், உங்களை மதிப்பிடுவதற்கு அல்ல.

 

3. நான் பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) தொடர்பான பரிசோதனையை செய்கின்ற பொழுது என்ன நடக்கும்?

 

பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs)  தொடர்பான பரிசோதனை விரைவானவை, எளிதானவை, அவை பொதுவாக காயப்படுத்தாது. அனைத்து பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களுக்கும்(STDs) பரிசோதனை இல்லை - ஒவ்வொரு பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களுக்கும்(STDs) அதற்குரிய சொந்த சோதனைகள் உள்ளன. உங்களுக்கு என்ன சோதனைகள் தேவை என்பதை கண்டறிவதற்கு உங்கலுடைய மருத்துவர் உங்களுக்கு உதவ முடியும். பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) தொடர்பான பரிசோதனை பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்கலாம்:

● சிறுநீர் சோதனை - நீங்கள் ஒரு கோப்பையில் சிறுநீர் கழிப்பீர்கள்.

● ஒரு கன்னத்தில் துடைப்பம் - எச்.ஐ.வி.யை(HIV) சோதிப்பதற்கு உங்களுடைய கன்னத்தின் உட்புறத்தை மென்மையான துணியால் தேய்க்கவும்.

● ஒரு இரத்த பரிசோதனை - உங்களுடைய தாதி(nurse) அல்லது மருத்துவர் உங்களுடைய கையிலிருந்து இரத்தத்தை எடுக்கின்றார் அல்லது விரைவாக விரலில் குத்தி எடுப்பார்.

● உடல் பரிசோதனை - மருக்கள், புண்கள், தடிப்புகள், எரிச்சல் அல்லது வெளியேற்றத்தைசரிபார்ப்பதற்கு உங்களுடைய தாதி(nurse) அல்லது மருத்துவர் உங்களுடைய பிறப்புறுப்புப் பகுதியை பார்ப்பார்.

● உங்களுடைய புண்களை சோதித்தல் - உங்களுடைய தாதி(nurse) அல்லது மருத்துவர் உங்களுடைய ஏதேனும் புண்கள் அல்லது கொப்பளங்களில் இருக்கின்ற திரவத்தை ஒரு துடைப்பால் எடுப்பார்.

●வெளியேற்றுவதற்கு அல்லது உங்களுடைய ஆண்குறி, யோனி, சிறுநீர்க்குழாய், கருப்பைவாய், ஆசனவாய் அல்லது தொண்டையிலிருந்து மாதிரி ஒன்றை எடுப்பதற்கு துடைப்பம் ஒன்றை பயன்படுத்தல்.

உங்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெரும்பாலான பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களுக்கு(STDs) நீங்கள் பரிசோதனை செய்யலாம். சில பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) ஒரே மாதிரியாக தோன்றுகின்றன மற்றும் செயற்படுகின்றன, எனவே நீங்கள் பல்வேறு நோய்த் தொற்றுகளுக்காக சோதிக்கப்படலாம்.

உங்களுக்கு ஒரு பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்(STD) இருந்தால் உங்களுடைய மருத்துவரால் இப்பொழுதே சொல்ல முடியும். ஆனால் சில சோதனைகள் ஒரு ஆய்வகத்திலிருந்து திரும்பிவர சில நாட்கள் அல்லது வாரங்கள் எடுக்கும். பல கிளினிக்குகள்/ மருத்துவகூடங்கள் எச்.ஐ.வி.க்கு(HIV) விரைவான பரிசோதனையை செய்ய முடியும் - உங்களுடைய முடிவை சுமார் 20 நிமிடங்களில் பெறுவீர்கள்.

 

4. எனக்கு ஒரு பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய் (STD) இருப்பது தெரிய வந்தால் நான் என்ன செய்ய வேண்டும்?

 

உங்களுக்கு ஒரு பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய் (STD) இருப்பதை கண்டறிவது பயமாக இருக்கும். நீங்கள் முதலில் குழப்பமாக, சங்கடமாக அல்லது வருத்தமாக உணரலாம். ஆனால் மிகவும் வருத்தப்படாமல் இருக்க முயற்சி செய்யுங்கள் - நீங்கள் நன்றாக இருப்பீர்கள், நீங்கள் தனியாக இல்லை.

உங்களுக்கு பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) இருப்பதை கண்டறிகின்ற பொழுது செய்யவேண்டிய சிறந்த விடயமானது, அதற்கு சிகிச்சையளிப்பதற்காக உங்களுடைய மருத்துவரின் வழிகாட்டுதல்களை பின்பற்றுவதாக இருக்கின்றது. நீங்கள் யாருடன் உடலுறவு கொள்கின்றீர்கள் என்பதையும் நீங்கள் சொல்ல வேண்டும், எனவே தேவைப்பட்டால் அவர்களும் பரிசோதனை செய்து சிகிச்சை பெறலாம். இது எளிதான உரையாடல் அல்லவே, ஆனால் இது முக்கியமானதொன்று.

பல பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களை(STDs) மருந்துகளால் எளிதாக குணப்படுத்த முடியும், எனவே நீங்கள் உங்களுடைய சிகிச்சையை முடித்து உங்களுடைய வாழ்க்கையை தொடரலாம். மேலும் சில பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களை(STDs) குணப்படுத்தமுடியாவிட்டாலும், உங்களுடைய அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கவும், நீங்கள் உடலுறவு கொள்ளுகின்ற எவருக்கும் உங்களுடைய பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) பரவுவதை தடுக்கவும் நிறைய வழிகள் இருக்கின்றன.

பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs)  உள்ளவர்கள் உறவில் இருக்கலாம், உடலுறவு கொள்ளலாம், முற்றிலும் இயல்பானதொரு வாழ்க்கையை வாழலாம். ஒரு பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்(STD) இருப்பது வெட்கப்பட வேண்டியதொன்றல்ல, நீங்கள் "அழுக்கு" அல்லது ஒரு கெட்ட நபர் என்று அர்த்தமல்ல - நீங்கள் ஒரு தொற்றுநோயை பெற்ற மிகவும் சாதாரணமான ஒரு மனிதர் என்றுதான் அர்த்தம். யதார்த்தம் என்னவென்றால், யாரோ ஒருவருடன் பாலியல் உறவு கொண்ட எவருக்கும் பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) ஏற்படலாம். மேலும் ஒரு சில பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) பாலியல் அல்லாத வழிகளிலும் பரவுகின்றன.

உங்களுக்கு கையாள்வதில் சிரமம் இருந்தால், உங்களுடைய துணை, நெருங்கிய நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர் மீது சாய்வது உங்களை நன்றாக உணர வைக்கும். ஆலோசகர்கள் மற்றும் சிகிச்சையாளர்கள் ஆறுதலின் ஆதாரங்களாக இருக்கலாம் - எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களுக்கு நன்றாக உணர உதவுவதற்கு அவர்கள் பயிற்சி பெற்றிருக்கின்றார்கள்.

FPA இலங்கை - மகிழ்ச்சியான வாழ்க்கை மையம்(Happy Life Centre) நீங்கள் பேசுவதற்குபாதுகாப்பான இடத்தை வழங்குகின்றது. 

+94 76 588 4881 ற்கு அழைக்கவும் அல்லது வாட்ஸ்அப் செய்யவும்

 

5. நான் பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களுக்கு(STDs) எங்கே பரிசோதிக்க முடியும்?

 

உங்களுடைய உள்ளூர் இலங்கை குடும்ப கட்டுப்பாட்டு சங்க கிளினிக்/மருத்துவகூடம், தேசிய பாலியல் நோய்/எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டம்(NSACP) கிளினிக்குகள்/மருத்துவகூடங்கள், மற்றும் சமூக சுகாதாரகிளினிக்குகள்/மருத்துவகூடங்கள் அல்லது ஒரு தனியார் மருத்துவர் அலுவலகத்தில் பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களுக்காக(STDs) நீங்கள் சோதிக்கப்படலாம்.



Learn More About:


How Do I talk with my Partner about STI

STD- Get Tested

STIS Description

எங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்

2024 | Family Planning Association All Rights Reserved
As Imagined By