ஆரோக்கியமான யோனியில் உள்ள சாதாரண பாக்டீரியாக்களின் சமநிலையின்;மை காரணமாக பாக்டீரியல் வஜினோசிஸ் ஏற்படலாம். அதாவது pH நிலை (அமிலம்/கார சமநிலை) சீர்குலைந்துள்ளது. பாக்டீரியல் வஜினோசிஸ் என்பது STI அல்ல.
யோனி சுத்திகரிப்பு, புதிய பாலுறவு துணைகள் அல்லது அதிகரித்த பாலியல் செயல்பாடு போன்ற யோனியில் மைக்ரோ ஃப்ளோரா பக்டீரியாவின் சமநிலையை மாற்றும் செயற்பாடுகள் பக்டீரியல் வெஜினோசிஸை ஏற்படுத்தும். இருப்பினும் பாலுறவு கொள்ளாத பெண்களுக்கும் இது ஏற்படலாம்.
மாத்திரைகளை வாய்வழியாக எடுத்துக்கொள்வதன் மூலம் பக்டீரியல் வெஜினோசிஸ் சிகிச்சையளிக்கப்படுகிறது. இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும்போது மது அருந்தக் கூடாது.
துணைக்கு சிகிச்சை தேவையில்லை.