இலங்கை குடும்பத்திட்ட சங்கத்தின் வளரிளம் பருவத்தினர் அலகினால் முன்னெடுக்கப்பட்ட கருத்திட்டம் லிய சவிய (பெண்பிள்ளைகளின் தீர்மானிக்கின்றனர்) என்பதாகும். இதில் இளைஞர்களின் ஈடுபாடு பெரிதும் உணரப்பட்டது. இலக்கு பிரதேசங்களாக 2 தகுதியில்லாத மாவட்டங்கள் தெரிவுசெய்யப்பட்டன. இந்த மாவட்டங்களில் 13-19 வயதுக்கு இடைப்பட்ட கருத்தரிப்பு மிக உயர்ந்த நிலையில் இருந்தது. 50 நண்பார்களாக இருப்போம் என்ன அமைப்பைச் சேர்ந்தவர்கள் நாட்டின் கிராமப்புறங்களுக்குச் சென்று 250 சம வயது கல்வியாளர்களுடன் கதைத்தனர். அந்த சம வயது கல்வியாளர்கள் 2500 இளம் 13-19 வயதுக்கு இடைப்பட்ட பெண்பிள்ளைகளுடன் கதைத்தனர். அந்த 2500 இளம் 13-19 வயதுக்கு இடைப்பட்ட பெண்பிள்ளைகள் அவர்களுடைய சம வயது கல்வியாளர்களுடன், நாடளாவிய ரீpதியில் முக்கிய செய்தியை எடுத்துச் செல்லும் ஓர் ஊடகமாக திரைப்படம் தயாரிப்தைக் கற்றுக்கொண்டனர். அவர்கள் இளம் பெண் பிள்ளைகள் என்ற வகையில் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு காணொளிகளைத் தயாரித்தனர்.