SRH Institute | The Family Planning Association of Sri Lanka

பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார(SRH) நிறுவனம்

பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார(SRH) நிறுவனம் சுகாதாரத் துறை நிபுணர்களுக்கு உயர்தர கல்வி மற்றும் துல்லியமான வழிகாட்டுதல்களை வழங்க உறுதிபூண்டுள்ளது.

பாலியல் சிகிச்சை, திருமண உளவியல், அறிவாற்றல் நடத்தை சிகிச்சை (CBT), உளவியல் மற்றும் நாடக சிகிச்சை போன்ற பகுதிகளில் சிறப்பு பாடநெறிகளை நாம் வழங்குகிறோம். நிபுணத்துவம் வாய்ந்த பயிற்றுவிப்பாளர்களால் வழிநடத்தப்படும் எமது நிகழ்ச்சித்திட்டங்கள், ஆரோக்கிய பராமரிப்பு மற்றும் உளநலனில் அர்த்தமுள்ள மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான திறன்கள் மற்றும் அறிவை சுகாதார வல்லுநர்களுக்கு வழங்குகின்றன.

எமது பாடநெறி ஒருங்கிணைப்பாளரை தொடர்பு கொள்வதற்கான விபரங்கள்

ஒருங்கிணைப்பாளர் : பத்ரா உடவத்த

இணையவழி அமர்வுகளுக்கான வசதிகள் உண்டு

செக்ஸ் தெரபி பாடநெறி

மனித பாலியல் உணர்வு பற்றிய ஆழமான அறிவுடன் உங்களை மேம்படுத்துங்கள்

பாலியல் என்பது மனித வாழ்க்கையின் ஒரு அடிப்படை அம்சமாகும், இருப்பினும் இது பல சமூகங்களில் ஒரு தடைசெய்யப்பட்ட விடயமாகவே உள்ளது. மனித பாலியல் நடத்தைகள், அணுகுமுறைகள் மற்றும் சவால்களைப் புரிந்துகொள்வது, ஆலோசகர்கள் மற்றும் சுகாதாரத் துறையினருக்கு அவற்றை திறம்படக் கையாள உதவுகிறது.

பாடநெறியின் சிறப்பம்சங்கள்:

  • பாலியலின் அறிவியல் பின்னணி
  • மனித பாலியல் நடத்தைகள் மற்றும் உடல்நிலைத் தோரணைகள்
  • பொதுவான பாலியல் கோளாறுகள் / செயலிழப்புகள் மற்றும் அவற்றிற்கான மேலாண்மை முறைகள்
  • ஹோர்மோன்கள் மற்றும் உளவியலின் தாக்கத்தைப் புரிந்துகொள்ளல்

வளவாளர் : வைத்தியர். நீல் பெர்னாண்டோ (உளவியல் ஆலோசகர் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர்)

உளவியல் மற்றும் ஆலோசனை பாடநெறி

உளநலக் குறைபாடுகள் பற்றிய உங்கள் புரிதலை ஆழப்படுத்துங்கள்

உளநலம்/மனநலம் என்பது ஒரு தனிநபரின் நலனிலும், சமூக நல்லிணக்கத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பெருமளவானோரால் விரும்பப்படும் இந்த பாடநெறி, மனநலக் குறைபாடுகளை கண்டறிந்து, அவற்றை புரிந்து கொண்டு, அவற்றை திறம்பட கையாள தேவையான அறிவையும் திறன்களையும் பங்கேற்பாளர்களுக்கு வழங்குகிறது.

பாடநெறியின் உள்ளடக்கம்:

நிறுவனர்கள் மற்றும் வரலாற்றுக்கான அறிமுகம்: மனோதத்துவத்தின் அடிப்படைகள்.

  1. மனநல கோளாறுகளில் நரம்பியல்:
    மன ஆரோக்கியத்தில் மூளையின் பங்கு.
  2. மனித பாலியல் நடத்தைகள் மற்றும் நிலைகள்
    • மனச்சோர்வு கோளாறுகள் (Depressive Disorders)
    • மனக்கவலை கோளாறுகள் (Anxiety Disorders)
    • பயம் சார்ந்த கோளாறுகள் (Phobic Disorders)
    • பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வு (OCD)
    • உடல்பிணியாக வெளிப்படும் மனநோய் (சோமாட்டோஃபார்ம் கோளாறுகள்/ Somatoform Disorders)
    • விலகல் அடையாளக் கோளாறுகள் (Dissociative Disorders)
  3. நீடித்த மற்றும் கடுமையான நிலைமைகள்:
    • மறதிநோய் (டிமென்ஷியா/ Dementia)
    • முரண்மூளை நோய் (Schizophrenia)
  4. நெருக்கடி சூழ்நிலைகள்:
    • தற்கொலை விழிப்புணர்வு மற்றும் இடையீடு
    • மரணம் மற்றும் இறப்பைப் புரிந்துகொள்ளல்
    • துக்க ஆலோசனை

பாடநெறியின் நன்மைகள்:

  • மனநலக் குறைபாடுகளைப் பற்றிய உறுதியான புரிதலைப் பெறல்.
  • கருணையுடனும் பயனுள்ள வகையிலும் ஆதரவு வழங்கும் முறையை கற்றுக்கொள்ளல்.
  • அவசர நிலைமைகளை கையாளல் மற்றும் துக்க ஆலோசனையில் முக்கியமான திறன்களை பெற்றுக்கொள்ளல்.
  • மனநலக் குறைபாடுகளுக்கு அடிப்படையான நரம்பியல் உயிரியலை புரிந்துகொள்ளல்.

அறிவாற்றல் நடத்தை சிகிச்சையில் சான்றிதழ் பாடநெறி

எண்ணங்களையும் நடத்தைங்களையும் மாற்றும் நுட்பங்களை கற்றுக்கொள்ளல்

நம் அன்றாட வாழ்க்கையை நடத்தும் போது, நம்முடைய எண்ணங்கள் நம்முடைய நடத்தை மீது தாக்கம் ஏற்படுத்துவதால், உணர்வுகளை சமாளிப்பது சற்று கடினமாக இருக்கலாம். நாம் என்ன நினைக்கிறோம், என்ன செய்கிறோம் என்பதன் அடிப்படையில் நம்முடைய உணர்வுகள் பாதிக்கப்படுகின்றன. தினசரி வாழ்க்கையை மிகவும் திறம்பட மற்றும் குறைந்த மன அழுத்தத்துடன் வழிநடத்த, அறிவாற்றல் நடத்தை சிகிச்சையை (CBT) பயன்படுத்தலாம். CBT நம்முடைய பழக்கவழக்கமான, சாதாரணமான மற்றும் பரிச்சயமான பிரச்சனைகளை ஒரு நடைமுறை சார்ந்த மற்றும் பயனுள்ள முறையில் தீர்க்க உதவுகிறது.

பாடநெறி உள்ளடக்கம்:

  • CBTக்கான அறிமுகம்
  • நடத்தையைத் தூண்டும் பதிவுகள் (Behavioural Activation Records)
  • எண்ணங்களை அறிதல்
  • உணர்வுகளை புரிந்து கொண்டு நிர்வகித்தல்
  • மன அழுத்தத்திற்கான CBT
  • சிக்கலைத் தீர்ப்பதற்கான CBT
  • நீடித்த நோய்களை நிர்வகிப்பதற்கான CBT
  • தூக்கத்தை மேம்படுத்துவதற்கான CBT
  • நடைமுறை பயிற்சி மற்றும் பரீட்சைகள்

வளவாளர் : வைத்தியர். நீல் பெர்னாண்டோ (உளவியல் ஆலோசகர் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர்)

ஒருங்கிணைப்பாளர் - பத்ரா உடவத்த- 0774625485

மின்னஞ்சல்: srhi@fpasrilanka.org

எங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்

2026 | Family Planning Association All Rights Reserved
As Imagined By