கொப்பர் T என்பது T வடிவத்திலான ஒரு சிறிய உபகரணம். இது பெண்ணுறுப்புக்குள் பொருத்துகிற (IUD) உபகரணமாகும். வளையக்கூடிய பிளாஸ்ரிக்கினால் உருவாக்கப்பட்டு செம்பினால் சுற்றப்பட்டு பயிற்சிபெற்ற மருத்துவ உத்தியோகத்தரால் கர்ப்பப்பை வாசலில் பொருத்தப்படுகிறது. இது ஹோர்மோன் அற்றது. அதனால் பெண்ணின் இயற்கையான மாதவிடாய் சுழற்சியில் மாற்ற்தை ஏற்படுத்தாது. (IUD) குறைந்தபட்சம் பத்து வருடங்களுக்கு இருக்கும். இது மிகச் சிறந்த கருத்தடை உபகரணமாகும். இதை அகற்றியவுடன் கருத்தறிக்க முடிவது இதில் உள்ள சிறப்பம்சமாகும்.
IUD Insertion Fee - Rs 2500.00
IUD Removal Fee - Rs 1000.00
IUD Insertion Follow Up Fee - Rs 500.00
To make an appointment, please call: 077 955 2979