யோனி வெளியேற்றங்கள் | The Family Planning Association of Sri Lanka

யோனி வெளியேற்றங்கள்

யோனி வெளியேற்றங்கள் இயல்பானவை மற்றும் உங்கள் யோனியை ஈரப்பதமாகவும் வசதியாகவும் வைத்திருக்க உதவுகிறது.

எது சாதாரனமானது?

சாதாரண யோனி வெளியேற்றம் தெளிவாகவோ அல்லது வெண்மையாகவோ இருக்கும். அது உங்கள் உள்ளாடையில் காய்ந்ததும் மஞ்சள் நிறமாகவும், லேசான வாசனையாகவும் இருக்கும்.

உங்கள் மாதவிடாய் சுழற்சி காலங்களில் யோனி வெளியேற்றம் மாறுகிறது. உங்களின் கரு முட்டை வெளியேறும் காலத்தில், மாதவிடாய்க்கு சுமார் 15 அல்லது 16 நாட்களுக்கு முன்பு, அதிக வெளியேற்றம் இருக்கும். அது வழுவழுப்பாகவும் தெளிவாகவும் இருக்கும்.

பல பயனுள்ள மைக்ரோஃப்ளோரா (பக்டீரியா) உங்கள் யோனியில் வாழ்கிறது. அவை தீங்கு விளைவிக்கும் உயிரி;களை கட்டுக்குள் வைத்திருக்கின்றன. அவை லேசான வாசனையை ஏற்படுத்துகின்றன, இது முற்றிலும் சாதாரணமானது. சாதாரண யோனி வெளியேற்றம் நாளுக்கு நாள் மாறலாம;.

இது பெரும்பாலும் கனமானது:

  • மாதவிடாய்க்கு நடுவில்
  • உங்களிடம் கருப்பையக கருத்தடை சாதனம் (IUD) இருக்கும் போது
  • கர்ப்ப காலத்தில; 
  • பாலுறவுக்குப் பிறகு

வெளியேற்றம் குறைவாக இருக்கும;:

  • தாய்ப்பால் கொடுக்கும் போது
  • மாதவிடாய் நின்ற பிறகு
  • கருத்தடை ஊசியைப் பயன்படுத்தும் போது 

எது அசாதாரணமானது?

யோனி வெளியேற்றம் அசாதாரணமானது:

  • அரிப்பு அல்லது எரிச்சல் இருக்கும் போது 
  • விரும்பத்தகாத நாற்றம் இருக்கும் போது
  • நிறம் மாற்றும் இருக்கும் போது

இதுவும் சாதாரணமில்லை:

  • மாதவிடாய் இடையே இரத்தப்போக்கு இருந்தால;
  • சங்கடமான அல்லது வலிமிகுந்த பாலுறவு இருந்தால்
  • அடிவயிற்று வலி இருந்தால;

இவற்றில் ஏதேனும் ஒன்று நோய்த்தொற்றின் அறிகுறியாக இருக்கலாம். அவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கவனித்தால், உங்கள் சுகாதார நிபுணரைத் தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கு பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்று (STI) இருக்கலாம் என்று நீங்கள் நினைத்தால் இது மிகவும் முக்கியமானது.

கோனோரியா மற்றும் கிளமிடியா போன்ற பல STD களில் எந்த அறிகுறியும் இல்லை.

இருப்பினும், சிலருக்கு இவை ஏற்படலாம;:

  • துர்நாற்றமுள்ள, மஞ்சள் அல்லது எரிச்சலூட்டும் வெளியேற்றம;
  • வழக்கத்திற்கு மாறான இரத்தப்போக்கு
  • வயிற்று வலி
  • வலிமிகுந்த பாலுறவு.

உங்களுக்கு எஸ்.டி.டி (STD) வருவதற்கான சிறிதளவு வாய்ப்பு இருந்தால், குடும்பத் திட்ட சங்கம் (FPA) போன்ற சுகாதார நிபுணரைப் பார்க்கவும;.

நீங்கள; 077 9552979 என்ற இலக்கத்திற்கு FPA Sri Lanka அவசர தொலைபேசி இலக்கத்தை அழைக்கலாம்

யோனி வெளியேற்றமானது உங்களுக்கு யோனி புணர்புழை (Vaginal Thrush) அல்லது பாலியல் ரீதியாக பரவும் நோய்கள்  உள்ளதற்கான அறிகுறியாக இருக்கலாம;. 

நல்ல யோனி ஆரோக்கியத்திற்கு நீங்கள;:

  • உங்கள் யோனி பகுதியை தினமும் கழுவ வேண்டும;
  • சுத்திகரிப்பு செய்ய வேண்டாம;
  • மலம் கழித்த பிறகு உங்களை முன்னிருந்து பின்னுக்குத் துடைத்துக் கொள்ளுங்கள;
  • பருத்தி உள்ளாடைகளை அணியுங்கள;
  • வாசனை திரவிய சோப்புகள் மற்றும் வண்ண கழிவறைக் காகிதங்களைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை எரிச்சலை ஏற்படுத்தும் இரசாயனங்கள் இருக்கலாம்.

உங்களுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால், தயவுசெய்து எங்களின் அவசர தொலைபேசி எண்ணுக்கு அழையுங்கள;: 077 955 2979

அவசர தொலைபேசி எண;: 077 955 2979

STDகள் பற்றி மேலும் அறிய: https://www.fpasrilanka.org/std


 

எங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்

2024 | Family Planning Association All Rights Reserved
As Imagined By