இது வாய்மூலம் உட்கொள்ளும் கருத்தடை மாத்திரை (OCP). இதில் பெண்களின் ஹோர்மோன்களைக் கட்டுப்படுத்துவதற்கு ஒஸ்ட்ரோஜன் மற்றும் புரெரஜெஸ்டின் குறைந்த அளவை எத்திநெல் எஸ்ட்ராடியல் மற்றும் லெவனே ஜெஸ்ரல் என்பவை உள்ளடங்கியுள்ளன. கர்ப்பத்தை தடுப்பதற்கு தினசரி உட்கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக ஒழுங்காக உட்கொள்ளுவது 99.9% வெற்றியளிக்கும். ஜேர்மனியின் பேயர் ஸ்கெரிங் பார்மா (Bayer Schering Pharma) கம்பனியால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது ஒரு இலங்கைப் பெண்மணி 50 வருடங்களுக்கு மேலாக உபயோகிக்கப்பட்டுள்ளது. மாத்திரை உட்கொள்ளுவதை நிறுத்தினால் கருத்தரிப்பதில் தாமதம் ஏற்படாது.
உடல் உறவூடன் தொடHபுபடுத்தாது ஒவ்வொரு நாளும் மாத்திரைகளை எடுத்தல் வேண்டும்.
1. வாய் மூல மாத்திரைகள் பிறப்புக் குறைபாடுகளை ஏற்படுத்துகின்றதா?
- இல்லை. பிறப்பு குறைபாடுகளை ஏற்படுத்துவதோ அல்லது எதிhகாலத்தில் பிள்ளைகளின் ஆரோக்கியத்தைப் பாதிப்பதோ இல்லை.
2. வாய் மூல மாத்திரைகள் தோலில் பருக்களை அதிகரிக்குமா?
- இல்லை.பருக்கள் உருவாவதை நிறுத்து வதற்கு உதவூகின்றது.
3. வாய் மூல மாத்திரைகள் மாதவிடாய்க்கு முன்னரான மன உளைச்சலை அதிகரிக்கின்றதா?
- இல்லை. மாதவிடாய்க்கு முன்னரான மன உளைச்சலைக் குறைக்கின்றது.
4. வாய் மூல மாத்திரைகள் மாதவிடாய் காலப் பகுதியில் அடிவயிற்று நோவினை அதிகரிக்குமா?
- இல்லை.மாத்திரைகள் மாதவிடாய்க் காலப்பகுதியில் அடிவயிற்று நோவினைக் குறைக்கின்றது.
5. வாய் மூல மாத்திரைகள் புற்றுநோயினை அதிகரிக்கின்றதா?
- இல்லை. இது உங்களை கருப்பைக் கழுத்து மற்றும் கருப்பை அகவணிப் புற்று நோயியிலிருந்து பாதுகாக்கின்றது.
6. வாய் மூல மாத்திரைகள் உங்களது உடல் பருமனை அதிகரிக்கின்றதா?
- இல்லை. மாத்திரையிலுள்ள புரொஜேஸ்தரோன் ஓமோன் உங்களை அதிகளவூ உணவருந்துவதற்கு பசியை அதிகரிக்கச் செய்யக்கூடும். ஆனால்இ நீங்கள் அவதானமாக உணவருந்தினால் மற்றும் உடற் பயிற்சி செய்தால் உங்களுக்கு எதுவித பிரச்சனையூம் இராது.
வாய்மூலம் உட்கொள்ளப்படும் கருத்தடை மாத்திரைகள்இ தமது முதலாவது கற்பத்தைத் பிற்போடுகின்ற தம்பதியினருக்கும்இ தமது கற்பங்களுக்கிடையில் இடைவெளியினை விரும்பகின்ற தம்பதியினருக்கும் பொருத்தமான கருத்தடை மாத்திரையாகும்.
பாதுகாப்பற்ற உடலுறவூ கொண்டு 72 மணித்தியாலங்களுக்குள் 12 மணித்தியால இடைவெளியில் 4 மாத்திரைகள் எடுத்தால்இ கருத்தரிப்பிற்கெதிராக மாத்திரை 90மூ பாதுகாப்பளிக்கின்றது.