இலங்கையில், புற்று நோய்க்கு முந்தைய நிலை புண்களைக் கண்டறிய பாப் ஸ்மியர் எனும் பரிசோதனையைப் தற்போது பயன்படுத்துகிறோம்.
இடுப்பிற்கு கீழே ஆடைகளை (உங்கள் உள்ளாடைகளையும் ) அவிழ்க்கும்படி கேட்கப்படுவீர்கள். உங்கள் மேல் ஒரு போர்வை போடப்படும்.
மருத்துவர் உங்கள் முழங்கால்களை மடித்து, குதிகால்களை கீழே கொண்டு வந்து, பின்னர் முழங்கால்களை விரித்து வைக்கச் சொல்வார்.
மருத்துவர் முதலில் உங்கள் யோனிக்கு வெளியே (வல்வா) ஏதேனும் அசாதாரணங்கள் உள்ளதா என்று பார்ப்பார்.
அவர்கள் உங்கள் கருப்பை வாயைக் காட்சிப்படுத்துவதற்காக ஒரு மென்மையான, குழாய் வடிவ உலோகக் கருவியை (ஸ்பெகுலம்) யோனிக்குள் மெதுவாகச் செருகுவார்கள் (இதற்கு ஒரு நிமிடம் அல்லது அதற்கு மேல் மட்டுமே ஆகும்).
கருப்பை வாய் காட்சிப்படுத்தப்பட்டவுடன், ஒரு சிறிய (ஸ்பேட்டூலா) தட்டைக் கரண்டியை பயன்படுத்தி உங்கள் கருப்பை வாயிலிருந்து ஒரு சிறிய மாதிரி செல்கள் எடுக்கப்படும்.
இந்த செயல்முறை வலிமிகுந்ததல்ல, ஆனால் நீங்கள் லேசான அசௌகரியத்தை அனுபவிக்கலாம். இதற்கு 5-10 நிமிடங்கள் மட்டுமே எடுக்கும், ஆனால் மருத்துவர் உங்கள் விருப்பமான வேகத்தில் செயல்முறைi.ய நடத்துவார்.
அதன் பிறகு மருத்துவர் ஏதேனும் அசாதாரணங்கள் இருக்கிறதா என்பதை உணர உங்கள் வயிற்றை அழுத்தியபடி உங்கள் யோனிக்குள் 2 விரல்களை மெதுவாக நுழைப்பார்.
முடிவுகள் வருவதற்கு 3-4 வாரங்கள் எடுக்கும், அது தயாரானவுடன் உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.
பாப் ஸ்மியர் பரிசோதனைக்கு தயாராவது எப்படி?
உங்கள் சோதனை திகதிக்கு 24 மணி நேரத்திற்கு முன்பு உடலுறவு கொள்ளாதீர்கள்
உங்கள் சோதனைத் திகதிக்கு 2-3 நாட்களுக்கு முன்பு யோனி கிரீம்கள், விந்தணுக்கொல்லிகள், எண்ணெய் வகைகள் அல்லது யோனியை கழுவமஷதற்கு Æ சுத்தம் செய்யும் சாதனங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாம்
மாதவிடாயின் போது, கர்ப்பமாக இருக்கும் போது மற்றும் பிரசவம் நடந்து 12 வாரங்களுக்கும் குறைவாக இருந்தால் பாப் ஸ்மியர் செய்யாமல் இருப்பது நல்லது.
சோதனை நிகழ்வெண்
தற்போது இலங்கையில் ஸ்கிரீனிங் என்பது 35 மற்றும் 45 வயதில் மட்டுமே. இருப்பினும், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பெண்களின் முதல் உடலுறவில் இருந்து 3 முதல் 5 ஆண்டுகள் வரை கர்ப்பப்பை வாய் ஸ்மியர் ஸ்கிரீனிங் செய்யப்படலாம்.
அரசாங்கத் துறையிலுள்ள MOH கிளினிக்குகள் வழங்கும் HPV தடுப்பூசியை எடுத்துக் கொள்ள இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலை செல்லும் பெண் பிள்ளைகளையும் (10 முதல் 11 வயது வரை) ஊக்குவித்தல். வயதான பெண்கள் தனியார் துறையில் HPV தடுப்பூசியை அணுகலாம்.
References
National Guideline on Early Detection and Referral pathways of common cancers in Sri Lanka for Primary Care Physicians (2020) National Cancer Control Programme, Ministry of Health & Indigenous Medical Services, Sri Lanka.
Kandanearachchi P et al. Guidance for cervical screening and management in Sri Lankan health care system. Sri Lanka Journal of Obstetrics and Gynaecology 2021; 43: 245-258.