சர்வதேச திட்டமிட்ட பெற்றோர் ஒன்றியம் (IPPF) தன்னார்வத் தொண்டு வழிகாட்டல் இயக்கமாகும். சர்வதேச திட்டமிட்ட பெற்றோர் ஒன்றியம்(IPPF) ஸ்தாபிக்கப்பட்டதன் அடிப்படை தொண்டர்களின் அர்ப்பணிப்புள்ள ஈடுபாடாகும். ஒன்றியத்தின் சக்திக்கும் செல்வாக்குக்கும் இது பாரிய தோற்றுவாயாகத் தொடர்ச்சியாக இருக்கிறது. சர்வதேச திட்டமிட்ட பெற்றோர் ஒன்றியம் (IPPF) 'பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் அனைவருக்குமான உரிமைகள்' என்ற விடயத்தை விரிவுபடுத்துவதில் தொண்டர்கள் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கின்றனர்.
சர்வதேச திட்டமிட்ட பெற்றோர் ஒன்றியத்தின் (IPPF) ஒரு தொண்டர், ஒன்றியத்தின் தொலைநோக்கு, செயற்பணி, விழுமியங்கள், காலம், அறிவு, திறன் அனுபவம் என்பவற்றை ஒன்றியத்தின் நோக்கங்களை விரிவுபடுத்துவதற்காகப் பகிர்ந்துகொள்ளுகின்றனர். தொண்டர்கள் சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் மக்களின் குறிப்பாக வறியவர்கள், ஓரங்கட்டப்பட்டவர்கள், சமூகத்தில் விலக்கி வைக்கப்பட்டவர்கள், தகுதி பெறாதவர்கள் ஆகியோரின் நல்வாழ்வு என்பவற்றை மேம்படுத்துவதற்கும் அவ்வாறு செய்கின்றனர்.
சர்வதேச திட்டமிட்ட பெற்றோர் ஒன்றியம் (IPPF) பல்வேறு பின்னணிகளைக் கொண்ட பல்வகை தொண்டர்களைக் கொண்டிருக்கின்றது. அவர் நிதி சேகரித்தல், சேவை வழங்குனர், நன்கொடையாளர், சமூக விநியோகஸ்தர், சம கல்வியாளர் அல்லது சமூகத்தில் மதியுரைஞர், சம வயதினர், அனைத்து நிலைகளிலுமுள்ள செல்வாக்கு செலுத்தும் மக்கள் போன்ற வித்தியாசமான பாத்திரங்களில் அவர்கள் ஒன்றியத்தின் வேலைகளுக்குப் பங்களிப்புச் செய்கின்றனர். அவ்வாறு செய்வதன் மூலம், தொண்டர்கள் ஒன்றியத்திலிருந்து அவர்களுடைய சொந்த வாழ்க்கைக்கும் எழுச்சியையும் அனுபவத்தையும் பெற்றுக்கொள்ளுகின்றனர். அதன்மூலம் அவர்களுடைய உறவுகளை பரஸ்பரம் பயனுள்ளதாக்கிக்கொள்ளுகின்றனர்.
சர்வதேச திட்டமிட்ட பெற்றோர் ஒன்றியம் (IPPF) தன்னார்வத் தொண்டர் கோட்பாடுகளைக் கொண்டாடுகின்றது. அத்துடன் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தொண்டர்கள் வழங்கிய பங்களிப்பைக் கவனத்திற்கொள்கின்றது. மாறுகின்ற உலகின் சவால்களைச் சந்திப்பதற்காகவும் பொருத்தமானமுறையில் பதிலளிக்கக்கூடியதாக இருப்பதற்கும் ஒன்றியம் தன்னார்வத் தொண்டு கோட்பாடுகளின் புதிய தத்துவத்தை அடையாளம் காண்கிறது. அதன் மூலம்:
ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் உரிமைகள் பிரிக்க முடியாத ஒரு பகுதி என்பதை ஏற்றுக்கொள்ளுவதோடு அதற்கான சூழல் உறுதி செய்யப்படுதல் வேண்டும்.
பால்நிலை மற்றும் பாலியல் அடையாளங்களைப் பொருட்படுத்தாமல் எவ்வித பாகுபாடும் காட்டாமல் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார உரிமைகளை மனித உரிமைகளாக ஏற்றுக்கொள்ளுதல்.
அனைவரினதும் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார உரிமைகளைப் உறுதிப்படுத்துதல், தனிப்பட்ட கௌரவம், சுதந்திரம் மற்றும் தீங்கிலிருந்து பாதுகாத்தல்.