உங்கள் இணையுடன் ஆணுறை பற்றி பேசுவது எப்படி
ஆணுறைகளைப் பற்றி பேசுவதை அருவருப்பாக உணரலாம், ஆனால் இது ஒரு முக்கியமான உரையாடல். கர்ப்பம், HIV மற்றும் பிற பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளை (STI) தடுக்க ஆணுறைகள் சிறந்த வழியாகும். உண்மையில், இம்மூன்று நிலைமைகளிலிருந்தும் பாதுகாக்கக்கூடிய ஒரே வழியாகும். உங்கள் இணையுடன் ஆணுறைகளை வசதியான முறையில் பயன்படுத்துவது பற்றி பேசுவது எப்படி என்பதை இங்கே காணவும்.
உங்களுக்கு ஆணுறை எப்போது தேவை?
யோனி, குத மற்றும் வாய்வழியான உடலுறவுக்கு ஆணுறைகளைப் பயன்படுத்த வேண்டும். நீங்கள் வேறு பாலின இணையொருவருடன், ஒரே பாலின இணையொருவருடன் அல்லது பல இணைகளுடன் உடலுறவு கொண்டாலும் ஆணுறைகளைப் பயன்படுத்துவது அவசியம்.
ஆணுறைகளைப் பற்றி பேசுவது ஏன் முக்கியம்?
எல்லோரும் ஆணுறைகளைப் பயன்படுத்துவதில் வசதியாக உணர்வதில்லை, எனவே உங்கள் இணை விருப்பமாக இருப்பார் அல்லது தயாராக இருப்பார் என்று முடிவு செய்யாது இருப்பது முக்கியம். இதைப் பற்றி பேசுவது நீங்கள் இருவரும் உங்கள் தேர்வை ஒப்புக்கொள்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது, இது உடலுறவு கொள்ள ஒப்புதல் அளிப்பதன் ஒரு பகுதியாகும்.
ஆணுறை என்ற தலைப்பை யார் முதலில் ஆரம்பிக்க வேண்டும்?
கருத்தடை பற்றி கலந்துரையாடுவதில் இருவரும் பொறுப்பை உணர வேண்டும், ஒரு நபர் மட்டுமல்ல. சில கலாச்சாரங்களைப் பொறுத்த வரையில் பெண்கள் கொண்டு வருவது மிகவும் கடினமாக இருக்கலாம், ஆனால் இருவரும் பொறுப்பைப் பகிர்ந்து கொள்வது முக்கியம்.
ஆணுறைகள் பற்றிய உரையாடலை எவ்வாறு தொடங்குவது
இவ்வுரையாடல் பற்றி சங்கடமாக உணருவது இயல்பு, ஆனால் உரையாடலை எளிதாக்க பல வழிகள் உள்ளன:
ஆரம்ப கட்டங்களிலேயே இந்த கலந்துரையாடலை கொண்டு வாருங்கள்: நீங்கள் உடல் ரீதியாக உறவில் ஈடுபடுவதற்கு முன் ஆணுறைகளைப் பயன்படுத்துவது பற்றி பேசுங்கள். இம்முறையில், நீங்கள் இந்த விடயம் சார்ந்த அழுத்தத்தில் சிக்கிக்கொள்ள மாட்டீர்கள். என்ன எதிர்பார்க்கப்பட வேண்டும் என்பதை முன்கூட்டியே அறிவீர்கள்.
கேள்விகளைக் கேளுங்கள்: "நீங்கள் ஆணுறைகளைப் பயன்படுத்துகிறீர்களா?" , "உங்களிடம் ஆணுறையேதும் இருக்கிறதா?" "உங்களுக்கு எந்த வகை /சுவை /அமைப்பு பிடிக்கும்?" போன்ற கேள்விகளை நீங்கள் கேட்கலாம்.
நீங்கள் ஏன் இதைப் பற்றி பேசுகிறீர்கள் என்பதை விளக்குங்கள்: இது அவநம்பிக்கையைப் பற்றியது அல்ல எனவும் இது உங்கள் இருவர் மீதான அக்கறை மற்றும் பாதுகாப்பு பற்றியது என்று உங்கள் இணைக்கு உறுதியளிக்கவும்.
தெளிவாகவும் நேரடியாகவும் இருங்கள்: நீங்கள் இருவரும் பாதுகாப்புக்காக ஆணுறையைப் பயன்படுத்த ஒப்புக்கொண்டால் மட்டுமே நீங்கள் உடலுறவு கொள்வீர்கள் என்று உங்கள் இணையிடம் சொல்லுங்கள்.
ஒன்றாக திட்டமிடுங்கள்: ஆணுறைகளை யார் வழங்குவார்கள், அவற்றை நீங்கள் எங்கு பெறலாம் என்பதை முடிவு செய்யுங்கள்.
உங்கள் இணை ஆணுறை பயன்படுத்த விரும்பவில்லை என்றால் என்ன செய்வது?
உங்கள் இணை ஆணுறை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை என்றால், அவர்களை ஊக்குவிக்க சில வழிகள் இதோ:
ஆணுறைகளுடன் நீங்கள் இன்னும் சிறந்த உடலுறவை அனுபவிக்க முடியும்: சுவையான அல்லது வித்தியாசமான ஆணுறைகளைப் பயன்படுத்துவது போன்றவை எவ்வாறு வேடிக்கையாக இருக்கும் என்பதையும், சுகாதார அபாயங்களைப் பற்றி கவலைப்படாமல் இருவரும் உடலுறவை அனுபவிக்க அவை எவ்வாறு உதவுகின்றன என்பதையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஆணுறைகள் ஒருவருக்கொருவர் மீதான ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுகின்றது: ஆணுறையைப் பயன்படுத்துவது உங்கள் இணையின் நல்வாழ்வு மற்றும் உங்கள் சொந்த நலனில் நீங்கள் அக்கறை காட்டுகிறீர்கள் என்பதைக் காட்டுகிறது.
ஆணுறைகள் பாதுகாப்பானவை மற்றும் பயன்படுத்த எளிதானவை: ஆணுறைகளைப் பயன்படுத்துவதில் சுகாதார அபாயங்கள் எதுவும் இல்லை என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள், ஆனால் அவற்றைப் பயன்படுத்தாதது உடலுறவு கொள்வது தேவையற்ற கர்ப்பம், பாலியல் ரீதியான தொற்றுநோய்கள் அல்லது HIVக்கு வழிவகுக்கும்.
ஆணுறைகள் அனைவராலும் பெற்றுக்கொள்ளக்கூடிய விலை அணுகக்கூடிய வசதி கொண்டவை: ஆணுறைகள் அரசாங்க சிகிச்சை நிலையங்கள், FPA ஸ்ரீலங்கா சிகிச்சை நிலையங்கள் மற்றும் அவற்றின் ஆன்லைன் ஸ்டோர் (https://www.fpasrilanka.org/en/condoms ) வழியாக கிடைக்கின்றன, மேலும் அவை பெரும்பாலான பல்பொருள் அங்காடிகள் மற்றும் அனைத்து மருந்தகங்களிலும் விற்கப்படுகின்றன.
எந்தவொரு கட்டுக்கதைகளையும் நம்ப வேண்டாம் : சிலருக்கு ஆணுறைகளைப் பற்றி தவறான கருத்துக்கள் உள்ளன, அவை "ஆண்மை" அல்ல அல்லது உடலுறவின் இன்ப அம்சத்தை குறைக்கும் என்று நினைப்பது போன்றவையாகும். அவை உண்மையல்ல என்று நீங்கள் விளக்க முயற்சி செய்யலாம்.