ஒரு ஐயூடி(IUD) என்பது கர்ப்பத்தை தடுப்பதற்காக உங்களுடைய கருப்பையினுள் வைக்கப்படுப்படுகின்ற ஒரு சிறிய சாதனமாகும். இது நீண்ட கால, மீளக்கூடிய, மற்றும் மிகவும் பயனுள்ள பிறப்பு கட்டுப்பாட்டு முறைகளில் ஒன்றாக இருக்கின்றது.
1. ஐயூடி(IUD) என்பதன் விரிவாக்கம் என்ன?
2. ஐயூடி(IUD) கள் எவ்வாறு வேலை செய்கின்றன?
3. அவசர கருத்தடையாக ஐயூடி(IUD) கள் பயன்படுத்தப்பட முடியுமா?
ஐயூடி(IUD) என்பது கருப்பையக சாதனத்தை குறிக்கின்றது (IntraUterine Device). ஒரு பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணரினால் கருப்பையினுள் செருகப்படுகின்ற / உட்செலுத்தப்படுகின்ற கொப்பரினால் மூடப்பட்டு மற்றும் நெகிழ்வான பிளாஸ்டிக்கினால் இது உருவாக்கப்படுகின்றது. இது ஹோர்மோன் இல்லாதது, எனவே இது ஒரு பெண்ணுடைய இயற்கையான மாதவிடாய் சுழற்சியை மாற்றாது. ஐயூடி(IUD) குறைந்தது 10 வருடங்கள் ஒரே இடத்தில் இருக்கும் அத்தோடு இது ஒரு உயர் / அதிக பயனுள்ள கருத்தடை முறையாகும். அகற்றப்பட்ட உடனேயே கர்ப்பம் தரிப்பதற்கான திறன் இருப்பது ஒரு அனுகூலமாக இருக்கின்றது
ஆம்! அவசர கருத்தடையாக ஐயூடி(IUD) நன்றாக வேலை செய்கின்றது. பாதுகாப்பற்ற உடலுறவுக்கு பின்பு 120 மணித்தியாலங்களுக்குள் (5 நாட்களுக்குள்) நீங்கள் அதை போட்டு பெற்றுக்கொண்டால், அது 99.9% க்கும் அதிக பயனுள்ளதாக இருக்கும். உடலுறவுக்கு பின்பு கர்ப்பத்தை தடுப்பதற்கு இது மிகவும் பயனுள்ள வழியாகும்.
ஐயூடி(IUD) பற்றி மேலும் படிக்க இங்கே கிளிக் செய்க: http://www.fpasrilanka.org/content/copper-t
Other Topics: