நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
விரைச்சிரை புற்றுநோய் என்பது இளம் ஆண்களை, குறிப்பாக 15 - 44 வயதுக்குட்பட்டவர்களை பாதிக்கும் மிகவும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்றாகும். இருப்பினும், பல இளைஞர்கள் இன்னும் இந்நிலையை பற்றி அறியாதிருப்பதோடு அவர்களின் விந்தணுக்களை தவறாமல் பரிசோதிப்பதுமில்லை. எனினும், ஆரம்பகாலத்திலே நோயை கண்டறிவதன் மூலம் பயனுள்ள சிகிச்சைகள் வழங்கப்படுவதன் மூலமும் விரைச்சிரை புற்றுநோய் 90% க்கும் அதிகமான குணப்படுத்தக்கூடிய விகிதத்தைக் கொண்டுள்ளது.
விரைச்சிரை புற்றுநோயின் வளர்ச்சிக்கு குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லை, ஆனால் விரைச்சிரை புற்றுநோயின் ஆபத்து பின்வரும் காரணிகளால் அதிகரிக்கிறது:
விரைச்சிரை புற்றுநோயின் வலுவான குடும்ப வரலாறு. (விரைச்சிரை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மற்ற ஆண் குடும்ப உறுப்பினர்களும் இருந்தால்)
கீழிறங்காத விந்தகம் (ஒன்று அல்லது இரண்டு விந்தகங்கள் விதைப்பைக்குள் நகராமல் வயிற்றுப் பகுதியில் இருக்கலாம்).
மலட்டுத்தன்மை
விரைச்சிரை வளர்ச்சியில் இயல்பு மீறல் (Klinefelter’s syndrome)
HIV/AIDS
விரைச்சிரை புற்றுநோயின் பொதுவான அறிகுறி விந்தகத்தில் வலியற்ற கட்டியை உணர்வது. இருப்பினும், சில நபர்கள் இப்பகுதியில் லேசான அசௌகரியத்தை உணரலாம். மேலும் அறிகுறிகளில் விரைகளின் வீக்கம் அல்லது சிவத்தல், முதுகுவலி மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை அடங்கும்.
விரைச்சிரையை சுய பரிசோதனை செய்வது எப்படி
ஆரம்பகாலத்திலே இந்நிலையை கண்டறிதலின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, அனைத்து ஆண்களும் தங்கள் விந்தணுக்களை தவறாமல் பரிசோதிக்க வேண்டியது அவசியம். குளித்ததற்கு பின்னரான காலம் விந்தகங்களை பரிசோதிக்க சிறந்த நேரம் ஆகும். ஒவ்வொரு விந்தகமும் மாறி மாறி பரிசோதிக்கப்பட வேண்டும். தோலில் உள்ள மாற்றங்கள் மற்றும் இரண்டு விந்தகங்களுக்கும் இடையில் ஏதேனும் குறிப்பிடத்தக்க அளவு வேறுபாடு போன்ற வெளிப்படையான அசாதாரணங்களைக் காண முதலில் இரண்டு விந்தகங்களையும் முழுமையாக பரிசோதிக்கவும். பின்னர் ஒரு விந்தகத்தை உங்கள் உள்ளங்கையில் பிடித்து, பெருவிரல் மற்றும் ஒரு விரலைப் பயன்படுத்தி விந்தகங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கட்டமைப்புகளை மெதுவாக உணரவும். பின்னர் மற்ற விந்தகத்தை பரிசோதிக்கவும். ஒரு விந்தகம் மற்றொன்றை விட சற்று பெரியதாகவும், ஒன்று மற்றொன்றை விட சற்று சிறியதாகவோ/ பெரியதாகவோ இருப்பது இயல்பு. விதைப்பையில் விந்தகங்கள் மென்மையான பந்து போல உராய்வற்றதாகவும், விந்தகத்தின் மேல் மென்மையான அமைப்புடனும் உணர வேண்டும்.
கட்டியைக் கண்டறிந்தால் என்ன செய்வது
விந்தகங்களின் அளவு அல்லது தோற்றத்தில் ஏதேனும் மாற்றங்களை நீங்கள் கவனித்தால் அல்லது ஏதேனும் அசாதாரண கட்டிகளை உணர்ந்தால், ஒரு சுகாதார நிபுணருடன் கலந்தாலோசிப்பது முக்கியம், அவர் கட்டியை பரிசோதித்து, தேவைப்பட்டால் கேளாவொலி அசைசீர் நுண்ணாராய்ச்சி(ultrasound scan) போன்ற மேலும் சில சோதனைகளைக் கோருவார். பெரும்பாலான விரைச்சிரை கட்டிகள் மற்றும் மாற்றங்கள் புற்றுநோய் அல்ல. காந்த அதிர்வு அலை வரைவு நுண்ணாராய்ச்சி (MRI scan), மார்பக X - கதிர் பரிசோதனை (chest X -Ray) மற்றும் புற்றுநோய்க்கான குறிப்பிட்ட இரத்த பரிசோதனைகள் போன்ற கூடுதல் சோதனைகள் ஒரு நோயறிதலை உறுதிப்படுத்த உதவும். அது புற்றுநோயாக இருந்தால் அதன் பரவும் அளவைப் கண்டறியவும் உதவும்.
விரைச்சிரை புற்றுநோயை எதிர்கொள்ள முக்கிய அம்சம் விந்தகங்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதாகும், ஆனால் பெரும்பாலான நோயாளிகளுக்கு புற்றுநோயின் பரவலைப் பொறுத்து கீமோதெரபி அல்லது கதிரியக்க சிகிச்சை தேவைப்படும். விரைச்சிரை புற்றுநோய்க்கான சிகிச்சையானது விறைப்புத்தன்மையைப் பெறுவது போன்ற பாலியல் செயல்பாட்டை வழக்கமாக பாதிக்காது, ஆனால் கீமோதெரபி மற்றும் நோயாளி முழுமையாக குணமடையும் வரை ஆரம்பத்தில் உடலுறவில் ஆர்வத்தை இழக்கச் செய்கிறது. ஒரு விந்தகத்தை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவது கருவுறுதலை பாதிக்காது, ஆனால் கீமோதெரபி சிகிச்சையானது தற்காலிக மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடும்.
விரைச்சிரை புற்றுநோயைப் பற்றி பேசுவதும், இளம் ஆண்களிடையே விழிப்புணர்வைப் பரப்புவதும் அச்சுறுத்தலாக இருக்கும்போது, இளைஞர்களுக்கு சுய பரிசோதனை செய்ய அதிகாரம் அளிப்பது முக்கியம். விந்தகங்களில் உள்ள பெரும்பாலான கட்டிகள் புற்றுநோய் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஆனால் ஆரம்பகால நோயறிதலின் முக்கியத்துவம் காரணமாக, விந்தணுக்களில் ஒரு கட்டியை உணர்ந்தால் நீங்கள் விரைவில் மருத்துவ ஆலோசனையை நாட வேண்டியது அவசியம்.