தோலுக்கு கீழே செருகப்படுகின்ற/ உட்செலுத்தப்படுகின்ற (சப்டெர்மல்) ஒரு பயனுள்ள, மீளக்கூடிய கருத்தடை முறை. இது உங்களுக்கு ஐந்து வருடங்கள் வரை பாதுகாப்பை கொடுக்கின்ற ஒரு நீண்டகால மீளக்கூடிய முறையாகும். 5 வருடங்கள் நிறைவடைவதற்கு முன்பாகவே ஒரு கர்ப்பமானது தேவைப்பட்டால் எந்த நேரத்திலும் அகற்றப்பட முடியும். அதில் 99% க்கும் அதிகமான செயற்திறன் உள்ளது. அகற்றப்பட்ட உடனேயே கர்ப்பம் தரிப்பதற்கான திறன் இருப்பது ஒரு அனுகூலமாக இருக்கின்றது.
1. உள்வைப்பு எவ்வாறு வேலை செய்கின்றது?
2. உள்வைப்பு எஸ்டிடி(STDs) களை தடுக்கின்றதா?
பிறப்பு கட்டுப்பாட்டு உள்வைப்பிலுள்ள ஹோர்மோன்கள் இரண்டு வழிகளில் கர்ப்பத்தை தடுக்கின்றன:
• விந்தணுவானது உங்களுடைய முட்டைக்கு நீந்திச் செல்வதை நிறுத்துகின்ற உங்களுடைய கருப்பை வாயிலுள்ள சளியை புரோஜெஸ்டின் தடிமனாக்குகின்றது. விந்தணு ஒரு முட்டையை சென்றடைய/ சந்திக்க முடியாதபொழுது, கர்ப்பம் தரிக்க முடியாது.
• புரோஜெஸ்டின் உங்களுடைய கருப்பையிலிருந்து முட்டைகள் வெளியேறுவதையும் (அண்டவிடுப்பு என்று அழைக்கப்படுகின்ற) தடுக்கலாம், அதனால் கருவுறுவதற்கு முட்டை இருக்காது. முட்டைகள் வெளியேற்றப்படாத பொழுது, நீங்கள் கர்ப்பம் தரிக்க முடியாது.
உள்வைப்பை பற்றிய சிறந்த விடயங்களில் ஒன்று என்னவென்றால், அது நீண்ட காலத்திற்கு நீடிக்கும் - 5 வருடங்கள் வரை - ஆனால் அது நிரந்தரமானது அல்ல. நீங்கள் கர்ப்பம் தரிக்க வேண்டும் என்று முடிவெடுத்தாலோ அல்லது இனி உங்களுக்கு உள்வைப்பை வைத்திருப்பதற்கு விரும்பவில்லை என்றாலோ, உங்களுடைய வைத்தியரால் அதை வெளியே எடுக்க முடியும். உள்வைப்பானது அகற்றப்பட்ட பின்பு உங்களுக்கு விரைவாக கர்ப்பம் தரிக்க இயலுமாக இருக்கும்.
இங்கே உள்வைப்பு பற்றி மேலும் படிக்க: http://www.fpasrilanka.org/content/jadelle
Other Topics: