பாலியல் சம்மதம் என்பது பாலியல் செயலில் பங்கேற்பதற்கான ஒப்பந்தமாகும். ஒருவருடன் உடலுறவு கொள்வதற்கு முன், அவர்கள் உங்களுடன் உடலுறவு கொள்ள விரும்புகிறார்களா என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதேபோல் நீங்கள் விரும்புவது மற்றும் விரும்பாதது குறித்து உங்கள் துணையிடம் நேர்மையாக இருப்பதும் முக்கியம்.
சம்மதம் என்பது தத்தமது எல்லைகள், தனக்கு எது வசதியானது என்பன பற்றி கலந்துரையாடல், தன் பங்காளரின் கருத்துக்கு மதிப்பளித்தல் மற்றும் தெளிவற்ற விடயங்களை சரிபார்த்தல் போன்றவை அடங்கிய ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். ஒவ்வொருமுறையும் உடலுறவுக்கு ஒப்புக்கொள்ளும் போதும் இருவரும் சம்மதம் தெரிவிக்க வேண்டும்.
அனுமதியற்ற பாலியல் செயல்பாடு (வாய்வழிப் புணர்ச்சி, பிறப்புறுப்புத் தொடுதல் மற்றும் பிறப்புறுப்பு அல்லது குத வழி ஊடுருவல் உட்பட) பாலியல் வன்கொடுமை அல்லது பாலியல் பலாத்காரம் ஆகும்.
நீங்கள் சங்கடமாக உணர்ந்தால் எந்த நேரத்திலும் சம்மதத்தை திரும்பப் பெறலாம். இதைச் செய்வதற்கான ஒரு வழியானது, இந்தச் செயலில் நீங்கள் சௌகரியமாக உணரவில்லை என்றும் நிறுத்த விரும்புகிறீர்கள் என்றும் உங்கள் பங்காளரிடம் தெளிவாகத் தெரிவிப்பதே ஆகும்.
ஒப்புதலை திரும்பப் பெறுவதை வாய்மொழியாகச் செய்வது சில சமயங்களில் சவாலானதாகவோ அல்லது கடினமாகவோ இருக்கலாம், எனவே இதை வெளிப்படுத்த வாய்மொழி அல்லாத குறிப்புகளையும் பயன்படுத்தலாம். எந்தவொரு பாலியல் நடவடிக்கையிலும் அனைத்து தரப்பினரும் சௌகரியமாக இருப்பதை உறுதி செய்வதற்கான சிறந்த வழி, அதைப் பற்றி பேசுவதும், அவ்வப்போது சரிபார்ப்பதும், நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு அல்லது மாற்றுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அனைவரின் சம்மதத்தையும் உறுதி செய்வதுமே ஆகும்.
உங்கள் கடந்தகால நடத்தை, நீங்கள் என்ன அணிகிறீர்கள் அல்லது எங்கு செல்கிறீர்கள் போன்ற விடயங்களால் சம்மதம் குறிக்கப்படுவதில்லை. பாலியல் சம்மதம் எப்போதும் தெளிவாகத் தெரிவிக்கப்படவேண்டும்.- அதில் எந்த கேள்வியும் மர்மமும் இருக்கக்கூடாது. மௌனம் சம்மதத்தின் அறிகுறி அல்ல.
இதற்கு முன் உடலுறவு கொண்ட தம்பதிகள் அல்லது நீண்டகாலமாக ஒன்றாக இருந்தவர்கள் கூட உடலுறவுக்கு முன் சம்மதம் தெரிவிக்க வேண்டும் - ஒவ்வொரு முறையும்.
பாலியல் வன்கொடுமை பல்வேறு வடிவங்களை எடுக்கலாம், ஆனால் ஒன்று மட்டும் மாறாது: இது பாதிக்கப்பட்டவரின் தவறு அல்ல.
பாலியல் வன்கொடுமை என்ற சொல் பாதிக்கப்பட்டவரின் வெளிப்படையான அனுமதியின்றி நிகழும் பாலியல் தொடர்பு அல்லது நடத்தையைக் குறிக்கிறது. பாலியல் வன்கொடுமையின் சில வடிவங்கள் பின்வருமாறு:
பாலியல் பலாத்காரம் என்பது பாலியல் வன்கொடுமையின் ஒரு வடிவமாகும், ஆனால் அனைத்து பாலியல் வன்கொடுமைகளும் பாலியல் பலாத்காரம் அல்ல. பாலியல் பலாத்காரம் என்ற சொல் பெரும்பாலும் அனுமதியற்ற பாலியல் ஊடுருவலை உள்ளடக்கிய சட்ட வரையறையாகப் பயன்படுத்தப்படுகிறது.