இலங்கை குடும்பத்திட்ட சங்கம் ஐக்கிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்துடன் (UNDP) 2014 ஒக்ரோபர் மாதம் பன்னாட்டு தெற்காசிய உலக நிதிய HIVயின் கீழ் துணை-பெறுநர் என்றவகையில் ஓர் உடன்படிக்கையில் கையொப்பமிட்டது. பன்னாட்டு நிகழ்ச்சித்திட்டத்தில் எட்டு நாடுகள் உள்ளடங்குகின்றன. அவையாவன, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைதீவு, நேபாளம், பாக்கிஸ்தான், இலங்கை என்பவையாகும். இதற்கு உலக நிதியத்திலிருந்து பல்வருடங்களுக்கு (2013-2015) 16.7 மில்லியன் டொலர் நன்கொடையாக வழங்கப்பட்டது. இலங்கை UNAIDS ஐ.நா வதிவிட அணி ஊடாக தொழில்நுட்ப உதவிகளை வழங்குகிறது.
இந்த பிராந்திய நிகழ்ச்சித்திட்டம் ஆணுடன் ஆண் பாலுறவு கொள்கின்றவர்களுக்கிடையிலும் (MSM) தெற்காசியாவில் பாலமாற்றம் செய்தவர்களுக்கிடையிலும் HIV பரவும் நிகழ்ச்சித்திட்டத்தைக் குறிக்கிறது. இலங்கையில் துணை பெறுனர் என்ற வகையில் இலங்கை குடும்பத்திட்ட சங்கம் நிலைபேறான தன்மை மற்றும் உயர் தலையீட்டு அழுத்தம் என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கு உள்ளூராட்சி மன்றங்களுடன் சுகாதார சேவை வழங்குநர்களுடனும் விநியோகத்தில் கவனம் செலுத்துபவர், தர கொள்ளளவு அபிவிருத்தி உதவி மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்குநர் ஆகியோருடனும் இணைப்பாக்கத்தை ஏற்படுத்துவதை நிரூபிப்பதற்கு சமூக முறைமையை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும்.
பிரதான சனத்தொகையில் படிப்படியாக அதிகரிக்கும் போக்கு காணப்பட்டாலும் இலங்கையில் HIV பரவும் நிலை குறைவாகவே இருப்பதாகக் கருதப்படுகிறது. எவ்வாறாயினும், ஆணுடன் பாலுறவு கொள்கின்ற ஆண்கள், பால்மாற்றம் செய்தவர்கள் போன்றவர்கள் மத்தியில் மறைவாகப் பரவும் தன்மை உயர்ந்திருப்பது அவதானிக்கப்படுகிறது.
உயர் சமூக கலங்கமும் ஒரே பாலுடையவர்கள் பாலுறவில் ஈடுபடுதல் இலங்கையில் தண்டனைக்குரிய குற்றமாக இருப்பதனாலும் இந்த மக்களுக்கு சுகாதார கவனிப்புகளை வழங்குவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. அதனால் சுகாதார பணியாளர்களும் அமைப்புகளும் HIV தடுப்பு, சிகிச்சை, கவனிப்பு, உதவி ஆகிய நிகழ்ச்சித்திட்டங்களுடன் அவர்களை அணுகுவது கஷ்டமாக இருக்கிறது. இத்தகைய சூழலில் சமூக அடிப்படையிலான அமைப்புகள் இச் சமூகங்களின் தேவைகளில் ஈடுபடுவதற்கு சிறந்த அமைப்புகளாக விளங்குகின்றன.
இந்த மானியத்தின் கீழ் இலங்கை குடும்பத்திட்ட சங்கம் ஆண் தன்னினச் சேர்க்கையாளர்களினதும் பால்மாற்றம் செய்தவர்களினதும் உரிமைகளையும் சுகாதார பிரச்சினைகளையும் அணுகி ஆற்றல் விருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்ற அடிப்படையலான அமைப்புகளைப் பலப்படுத்துவதற்குப் பணியாற்றும். மேலும் இலங்கை குடும்பத்திட்ட சங்கம் சமூகத்தில் சாத்தியமான கொள்கைகளையும் சட்ட சூழலையும் பலப்படுத்துவதற்கு சமூக குழுக்களுடனும் தேசிய பங்காளர்களுடனும் செயலாற்றும்