வாழ்க்கைக்கான ஒளி செயற்றிட்டம் (The Light to Life Project)- LILI செயற்றிட்டம் என அறியப்படும் இது, உள்ளக மோதலின் போது மாற்றுத்திறனாளிகளான இராணுவத்தினர் எதிர்கொண்ட பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதார சிக்கல்களை எதிர்கொள்வதற்காகவும், அவர்களது பாலியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு உதவும் வகையிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இராணுவ புலனாய்வு பிரிவு மற்றும் இலங்கை இராணுவத்தின் சேவா வனிதா பிரிவு என்பவற்றின் ஒத்துழைப்புடன் FPA ஸ்ரீலங்காவினால் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது. பரிந்து பேசல் / விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் உளவளத் துணை சேவைகள் உள்ளடங்கலாக உடல்ரீதியாக மாற்றுத்திறனாளிகளான இராணுவ வீரர்களுக்கு பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதார சேவைகளை வழங்குவதற்கான பல்வேறு நடமாடும் வைத்திய முகாம்கள் அமைக்கப்பட்டன. இலங்கை கஜபா படைப்பிரிவு, அனுராதபுர சேனபுர முகாம், இலங்கை சேவை பிரிவு – பனாகொடை முகாம் என்பவற்றை உள்ளடக்கியதாக 10 படைப்பிரிவுகளைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் இந்த நிகழ்ச்சியின் கீழ் பயன் பெற்றனர்.
இன்று, இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் இராணுவத்திலிருந்து வெளியேறியவர்களுக்காக LILI செயற்றிட்டத்தின் மூலம் சேவை வழங்கப்படுகின்றது.
அளப்பெரும் தியாகம் புரிந்த இராணுவத்தினர்களின் 500 குடும்பங்களுக்கு பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதார விழிப்புணர்வு மற்றும் உளவளத்துணை சேவைகள் வழங்கும் நிகழ்ச்சிகளும் முன்னெடுக்கப்பட்டன. ரணவிரு சேவா அதிகார சபையின் ஒத்துழைப்புடன் இந்த சேவைகள் வழங்கப்பட்டன.
LILI செயற்றிட்டத்தின் ஊடாக, புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் எல்.ரி.ரி.ஈ போராளிகளுக்கும் பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதார சேவைகள் மற்றும் உளவளத்துணை சேவைகள் வழங்கப்பட்டன.