டெப்போ ஷாட் (டெப்போ-ப்ரோவெரா) என்பது ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒரு முறை நீங்கள் பெறுகின்ற ஒரு ஊசியாகும். இது பாதுகாப்பானது மற்றும் வசதியானது. நீங்கள் எப்பொழுதும் சரியான நேரத்தில் அதை பெற்றுக்கொண்டால் அது உண்மையில் நன்றாகவே வேலை செய்யும்.
1. பிறப்பு கட்டுப்பாட்டு ஷாட் எவ்வாறு வேலை செய்கின்றது
2. நான் எவ்வாறு ஷாட்டை எனக்கு சிறப்பாக வேலைசெய்ய வைப்பது?
டெப்போ-ப்ரோவெரா ஷாட்டில்(Depo-Provera shot) புரோஜெஸ்டின் என்கின்ற ஹோர்மோன் உள்ளடங்கியிருக்கின்றது. அண்டவிடுப்பை தடுப்பதன் மூலம் புரோஜெஸ்டின் உங்களை கர்ப்பமாவதிலிருந்து தடுக்கின்றது (அண்டவிடுப்பு என்பது ஒரு பெண்ணின் கருப்பையிலிருந்து ஒரு முட்டையை வெளியிடுவதாகும். முட்டை வெளியானதற்கு பிறகு, அது ஒரு விந்தணுவால் கருத்தரித்தல் ஏற்படக்கூடிய பலோப்பியன் குழாயில் பயணிக்கின்றது). இது கருப்பை வாய் சளியை தடிமனாக்குவதன் மூலமும் வேலை செய்கின்றது. கருப்பை வாயிலுள்ள சளியானது தடிமனாக இருக்கின்ற பொழுது, விந்தணுவால் அதனூடாக செல்ல முடியாது. அத்தோடு விந்தணுவும் முட்டையும் ஒன்று சேர முடியாதபொழுது, கர்ப்பம் தரிக்க முடியாது.
உங்களுக்கு தேவைப்படுகின்ற எப்பொழுது வேண்டுமானாலும் நீங்கள் குடும்ப கட்டுப்பாடு ஷாட்டை பயன்படுத்த தொடங்கலாம். உங்களுடைய மாதவிடாய் தொடங்கிய பின்பு முதல் 7 நாட்களுக்குள் உங்களுடைய முதலாவது ஷாட்டை நீங்கள் பெற்றுக்கொண்டால், நீங்கள் உடனடியாக கர்ப்பத்திலிருந்து பாதுகாக்கப்படுவீர்கள். உங்களுடைய சுழற்சியில் வேறு ஏதாவது காலத்தில் நீங்கள் அதை பெற்றுக்கொண்டால், ஷாட்டை எடுத்துக்கொண்ட பின்பு முதலாவது வாரத்திற்கு நீங்கள் வேறு வகையான பிறப்பு கட்டுப்பாட்டை (ஒரு ஆணுறை போன்றவை) பயன்படுத்த வேண்டிருக்கும்.
டெப்போ ஷாட்டை(Depo shot) பற்றிய மேலதிக தகவல்களுக்கு: http://www.fpasrilanka.org/content/depo-provera
Other Topics: