பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் என்பவற்றுடன் தொடர்புடைய விஸ்வ ஆவர்த்தன மீளாய்வு நடைமுறைக்கு உதவுவதற்கு ஒரு சிறிய மானிய கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். விஸ்வ ஆவர்த்தன மீளாய்வு (UPR) ஓர் அபூர்வ நடைமுறையாகும். இது அனைத்து ஐ.நா அங்கத்துவ அரசுகளின் மனித உரிமை அறிக்கைகளை மீளாய்வு செய்கிறது. UPR அரசாங்கத்தால் நடத்தப்படுகின்ற நடைமுறையாகும். இது மனித உரிமைகள் பேரவையின் கீழ் இருக்கின்றது. இது ஒவ்வொரு அரசும் தமது நாடுகளில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் அவர்களுடைய மனித உரிமைகள் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கும் என்ன நடவடிக்கை எடுத்தது என்பதைத் தெரிவிப்பதற்கு சந்தர்ப்பமளிக்கிறது. சபையின் பிரதான விடயம் என்றவகையில், மனித உரிமை நிலைகளை மதிப்பீடு செய்கின்றபோது ஒவ்வொரு நாடும் சமமாக நடத்தப்படுகின்றது என்பதை உறுதிசெய்தவற்கு UPR வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவொரு கூட்டுறவு நடவடிக்கை முறையாகும். இதில் ஒக்ரோபர் 2011 ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை இருக்கின்ற பொறிமுறையாகும். இதைப்போன்ற பொறிமுறைகள் வேறு எந்த நாட்டிலும் இல்லை. சபையின் பிரதான மூலக் கூறுகளில் இந்த UPR ஒன்றாகும். இது மனித உரிமைகளையும் அடிப்படை சுதந்திரத்தையும் பாதுகாப்பதில் ஒவ்வொரு அரசுக்கும் உள்ள பொறுப்பை முழுமையாக மதிப்பதற்கும் ஞாபகப்படுத்துகிறது.
இந்த மீளாய்வின் நோக்கம் வருமாறு:
பால்நிலை விடயங்களை முழுமையாக ஒருங்கிணைக்க எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் தேசிய மனித உரிமை நிறுவகங்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் உட்பட தகுதியான பங்கீடுபாட்டாளர்களின் பங்கேற்பை உறுதிப்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மீளாய்வு பின்வருவனவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது: