இலங்கை வீர முதன்மையானவர்கள் கருத்திட்டத்தில்: பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் உரிமைகளின் முன்னேற்றத்தில் வீர முதன்மையானவர்களையும் உள்ளடக்கங்களையும் உருவாக்குதல்.
இக்கருத்திட்டத்திலிருந்து எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகள் வருமாறு,
பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் உரிமைகளுக்காக (SRHR) இளைஞர்கள் மற்றும் ஊடகம் இணைந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் வலையமைப்புடன் ஒரே நேரத்தில் சிவில் சமூக வலையமைப்பையும் பட்டியெழுப்புதல்.
இரண்டு வருட காலப்பகுதியில் இலங்கை குடும்பத்திட்ட சங்கம் சிவில் சமூகங்களுடனும் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் வேலைசெய்து முன்னேற்றத்தை நிரூபித்துள்ளது. இதன்போது நாட்டின் நிர்வாக கட்டமைப்பில் பல்வேறு மட்டத்தில் கொள்கை தயாரிப்பாளர்கள் என்றவகையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூகங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைப்பின் கீழ் இலங்கை குடும்பத்திட்ட சங்கம் 905 பெண் தலைவிகளையும் 400 ஆண் தலைவர்களையும் பெற்றுள்ளது. இது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக வலையமைப்புகள் என்பவை இரண்டு பிரதான ஆக்கக்கூறுகளாகும். இவை கீழ் மட்டத்தில் கை கோர்த்துக்கொண்டு இயங்குகின்றன. இது இப்பணிகளைச் செயற்படுத்துவதை இலகுவாக்குகிறது.