கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பல உயிர்களைப் பாதிக்கிறது. உண்மையில் இது உலகளவில் நான்காவது மிகவும் பொதுவான புற்றுநோய் ஒன்றாகும் - ஆனால் இது தடுக்கக்கூடியது. தடுப்பு முறைகள் முதல் அறிகுறிகள், சிகிச்சை மற்றும் பலவற்றைப் பற்றி உங்களுக்கு இருக்கும் சில முக்கிய கேள்விகளை நாங்கள் இங்கு உள்ளடக்கியுள்ளோம்.
1. கர்ப்பப்பை புற்றுநோய் என்றால் என்ன? மற்றும் அதற்கும் HPV இற்கும் என்ன சம்பந்தம்?
2. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி?
3. கர்ப்பப்பை வாய் பரிசோதனை எப்படி வேலை செய்கிறது? அது வலியை ஏற்படுத்துமா?
4. கர்ப்பப்பை புற்றுநோயின் அறிகுறிகள் என்ன?
5. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு எவ்வாறு சிகிச்சையளிக்க வேண்டும்?
6. நான் கருப்பை நீக்கம் செய்திருந்தால் எனக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருமா?
7. நான் ஒரு திருநம்பி (Trans man) எனக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டா?
8. நான் HIVயினால் பாதிக்கப்பட்ட ஒருவர், இதனால் எனக்கு ஏற்படும் விளைவுகள் என்ன?
9. கர்ப்பப்பை வாய் புற்றுநோயைப் பற்றி நான் எவ்வளவு கவலைப்பட வேண்டும்?
கர்ப்பப்பை வாய் புற்றுநோயானது கருப்பை வாயில் உள்ள செல்கள் (யோனியில் இருந்து கருப்பையின் நுழைவாயில்) வீரியம் மிக்க (அதாவது தீங்கு விளைவிக்கும்) வழியில் மாறும்போது எற்படுகிறது.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான முதன்மைக் காரணம் மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) ஆகும். HPVயில் 100 இற்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. HPV முக்கியமாக சருமத்தில் இருந்து தோலுக்குபிறப்புறுப்பு தொடர்பு உட்பட பாதுகாப்பற்ற பாலியல் தொடர்பு மூலம் பரவுகிறது. இது மிகவும் பொதுவானது, மேலும் பாலினம் அல்லது பாலுணர்வைப் பொருட்படுத்தாமல், பெரும்பாலான பாலியல் செயலில் உள்ளவர்கள் தங்கள் வாழ்க்கையில் சில வகையான HPV ஐப் பெறுவார்கள். HPV க்கு எந்த அறிகுறிகளும் இல்லை, எனவே உங்களிடம் அது இருக்கிறதா என்று உங்களுக்குத் தெரியாமல் போகலாம், மேலும் அதற்கான சிகிச்சை முறை தற்போது இல்லை. பெரும்பாலான HPV நோய் தொற்றுகள் உடலின் சொந்த நோயெதிர்ப்பு அமைப்பு மூலம் அழிக்கப்படுவதால், இது கவலைப்பட வேண்டிய விடயம் ஒன்றல்ல.
HPV ஐ குறைந்த ஆபத்து மற்றும் அதிக ஆபத்து வகைகளாக பிரிக்க முடியும். குறைந்த ஆபத்தைக் கொண்ட HPV வைரஸ் பிறப்புறுப்பு மறுக்களை ஏற்படுத்தும். அதிக ஆபத்துள்ள HPV வைரஸானது முன்கூட்டிய கர்ப்பப்பை வாய்ப் புண்கள், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மற்றும் ஆசனவாய், பிறப்புறுப்பு, புணர்புழை, ஆண்குறி மற்றும் ஓரோபார்னக்ஸ் (வாய்க்குப் பின்னால் உள்ள தொண்டைப் பகுதி) ஆகியவற்றின் புற்றுநோய்களுடன் தொடர்புடையது.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் முக்கிய கருவியாக தடுப்பூசி மற்றும் பரிசோதனை விளங்குகிறது. எவரும் HPV சுமக்க முடியும்/ கடத்த முடியும் என்பதால், பெண்கள் உடலுறவு கொள்ளத் தொடங்குவதற்கு முன்பு, அதாவது வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு முன்பே அதை வழங்க இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இரண்டு வகையான தடுப்பூசிகள் உள்ளன. இரட்டை கூட்டு தடுப்பூசி, நான்கு கூட்டு தடுப்பூசி. இந்த இரண்டு தடுப்பூசிகளையும் 9 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகளுக்கு போடலாம். 13 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு 6 மாத இடைவெளியில் இரண்டு டோஸ்களும் , 13 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 3 டோஸ்களும் வழங்கப்படும்.
பெரியவர்களுக்கு வழக்கமாக கர்ப்பப்பை வாய்ப் பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் வாசிக்கும் இடத்தைப் பொறுத்து நீங்கள் சேவைகளைப் பெறலாம். இல்லையெனில், பாடசாலையில் தடுப்பூசி திட்டங்கள், சுகாதார மருத்துவா அதிகாரி அலுவலகத்தால நடத்தப்படும் சிகிச்சை மையங்களைத் தொடர்பு கொள்ளவும்.
கூடுதலாக அதிகரித்த ஆணுறை பயன்பாடு HPV வைரஸ் பரவும் அபாயத்தையும் குறைக்க உதவும். அத்துடன் மற்ற வகையான பாலியல் நோய்கள் மற்றும் STI, HIV போன்ற நோய்கள் ஏற்படுவதையும் குறைப்பதற்கு வழிவகுக்கும்.
மேலும் படிக்க
இந்த செயல்முறை பொதுவாக படுத்த நிலையில் உங்கள் முழங்கால்களை வளைத்து விரித்து வைத்தபடியே நடைபெறும். இந்த நிலையில் ஒரு சுகாதார நிபுணர் ஸ்பெகுலம் எனும் கருவியைப் பயன்படுத்துகிறார். இது பொதுவாக வலுக்கும் தன்மையை கொண்ட எண்ணெய்யின் உதவியுடன் யோனி மடலைத் திறக்க தொனிக்கும் செருகப்படுகிறது. நீங்கள் HPV பரிசோதனை அல்லது உயிரனுவயாளப் பெற்றால் , ஒரு சிறிய தூரிகையானது கருப்பை வாயில் இருந்து மாதிரிகளை சேகரிக்கப் பயன்படுகிறது, அது மேலும் பரிசோதிக்கப்படும். நீங்கள் அசிட்டிக் அமிலத்துடன் (VIA) காட்சி பரிசோதனையைப் பெற்றால், ஒரு சுகாதார நிபுணர் உங்கள் கருப்பை வாயில் அசிட்டிக் அமிலத்தைப் பூசி, மாற்றத்தை ஆய்வு செய்வார். இந்த முழு செயல்முறைக்கும் சில நிமிடங்கள் மட்டுமே எடுக்கும்.
கர்ப்பப்பை வாய் பரிசோதனையின் போது சிலர் சில அசௌகரியங்களை அனுபவிக்கலாம், ஆனால் அது பாதிப்பையோ வலியையோ ஏற்படுத்தாது. இந்த பரிசோதனையின் போது நீங்கள் பதட்டமாக இருந்தால், உங்கள் உடல்நல பராமரிப்பு நிபுணருக்கு அவர்கள் ஸ்பெகுலம் அல்லது அதிக மசகு எண்ணெய்யைப் பயன்படுத்த முடியும் என தெரியப்படுத்துங்கள். நீங்கள் பதட்ட நிலையில் இருந்து மீள சில மூச்சுப் பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம்.
உங்கள் பரிசோதனையின் பின்பு சில இலேசான இரத்தப்போக்கு ஏற்படலாம். அது கூடுதலாகவோ அல்லது வலிமிக்கதாகவோ இருந்தால் நீங்கள் மருத்துவ உதவியை நாட வேண்டும்.
நீங்கள் செய்த பரிசோதனையின் விருப்பத்தின் அடிப்படையில் பரிசோதனையின் இறுதி முடிவுகளை அதே நாளில் அல்லது சில நாட்களுக்குப் பிறகு உங்கள் சுகாதார வழங்குநரிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். அவர்கள் கவலைக்குரிய எதையும் கண்டறிந்தால், அவர்கள் மேலதிக விசாரணைக்கு உங்களைப் பரிந்துரைப்பார்கள்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் முக்கிய அறிகுறி அசாதாரண பிறப்புறுப்பு இரத்தப்போக்கு ஆகும். இது உடலுறவின் போது/ பிறகு இரதப்போக்கு அல்லது மாதவிடாய் நின்ற பிறகு ஏற்படும் இரத்தப்போக்கு ஆகும். இந்த இரத்தப்போக்கு மற்ற காரணங்களுக்காகவும் நிகழலாம். எனவே இது எதனால் ஏற்படுகிறது என்பதை தீர்மானிக்க மருத்துவ உதவியை நாடுவது நல்லது.
மற்ற அறிகுறிகளில் உடலுறவின் போது வலி மற்றும் அசௌகரியம், அசாதாரண யோனி வெளியேற்றம் ஆகியவை அடங்கும் (ஆனால் அவை மட்டுமல்ல). உங்கள் கீழ் முதுகு அல்லது இடுப்பில் வலி, மலச்சிக்கல், அடிக்கடி கழிப்பறையை பயன்படுத்துதல், உங்கள் சிறுநீரில் இரத்தம் அல்லது உங்கள் குடல்/சிறுநீர்ப்பையின் கட்டுப்பாட்டை இழப்பது.
கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் குறிப்பிடத்தக்க அறிகுறிகளை அனுபவிப்பதில்லை என்பதை கவனத்தில்கொள்ள வேண்டியது அவசியம், அதனால்தான் நீங்கள் ஆரோக்கியமாக உணர்ந்தாலும் வழக்கமான பரிசோதனைகள் செய்துகொள்வது அவசியம்.
முன்கூட்டிய கர்ப்பப்பை வாய் புண்கள் குணப்படுத்தக்கூடியவை ஆகும். நோயறிதலுக்குப் பிறகு நீங்கள் உங்கள் ஒப்புதலுடன் இந்த முன்கூட்டிய புண்களுக்கு சிகிச்சைப் பெறலாம். உங்கள் பரிசோதனையின் முடிவுகள் புற்றுநோய் புண்களைக் காட்டினால், X- கதிர்கள் மற்றும் அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை போன்ற மேலதிக பரிசோதனைகளை செய்ய வேண்டும்.
புற்றுநோயை குணப்படுத்த முடியாத நிலையில், வலி நிவாரணி சிகிச்சைக்கு உட்படுத்தப்படலாம். அதாவது உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தல் மற்றும் வலி மற்றும் பிறப்புறுப்பு இரத்தப்போக்கு போன்ற அறிகுறிகளை நீக்குதல்.
தேவை ஏற்படின் ஒரு சுகாதார சேவை அதிகாரி அல்லது வைத்தியருடன் இதற்கான தீர்வுகள் பற்றி கலந்துரையாடவும்.
இல்லை, உங்கள் கருப்பை வாய் முழு கருப்பை நீக்க அறுவை சிகிச்சையின் ஒரு பகுதியாக இருந்தால், உங்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்று நோயின் அபாயம் இல்லை.
உங்களுக்கு கருப்பை வாய் இருந்தால், ஆம். உங்கள் கருப்பை வாய் அகற்றப்பட்டிருந்தால், உங்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அபாயம் இல்லை.
பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு, மோசமாக நிர்வகிக்கப்படும் HIV ஆபத்துக்கள் மிக அதிகம். கர்பப்பை வாய்ப் புற்றுநோயானது HIV நோயுடன் வாழும் கருப்பை வாய் உள்ளவர்களிடையே மிகவும் பொதுவாக காணப்படும் புற்றுநோயாகும். எனவே HIV நோயுடன் வாழும் மக்கள் தகுதியுடையவர்களாக இருந்தால், HPV க்கு எதிராக தடுப்பூசி போடுவதும், அவர்களின் வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியான பரிசோதனைகளில் ஈடுபடுவதும் இன்றியமையாதது.
நீங்கள் அனுபவிக்கும் மேலே விவரிக்கப்பட்ட எந்த அறிகுறிகளும் பொதுவாக கவலைப்பட வேண்டிய ஒன்றல்ல. இருப்பினும், உங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் நீங்கள் ஒரு செயலில் பங்கு எடுப்பது முக்கியமானதாகும். இதன் பொருள் நீங்கள் தகுதி உடையவர்களாக இருந்தால், HPV தடுப்பூசியைப் பெறுவதும் , அது கிடைக்கப்பெறுவதும், உங்கள் வயது வந்த வாழ்நாள் முழுவதும் உங்கள் வழக்கமான பரிசோதனைகளில் கலந்துகொள்வதும் ஆகும். கர்ப்பப்பை புற்றுநோயில் இருந்து விடுபட இதுவே மிகவும் சிறந்த வழியாகும்.
பற்றி அறிய: மார்பக புற்றுநோய்