இலங்கை குடும்பத்திட்ட சங்கத்தில் இணைந்துள்ள இளைஞர்கள் இலங்கை UNFPA வினால் ஒழுங்கு செய்யப்பட்ட 'உரிய வயதுக்கு முந்திய திருமணம் மற்றும் நியதிச்சட்ட கற்பழிப்பு' (2012) பற்றிய குழு கலந்துரையாடல் போன்ற பல்வேறு கூட்டங்களில் ஈடுபட்டதன் ஊடாக சிவில் சமூகத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தை வகித்தனர். மேலும் இளைஞர் தொழில்நுட்ப மதியுரைக் குழு (YTAC) பல பணிக் குழுக்கள், பெண்களின் உரிமைகள் தொடர்பான இயக்கங்கள், மற்றும் ஓரங்கட்டப்பட்ட சமூகம், ஏனைய சிவில் சமூக அமைப்புகள் என்பவற்றிலும் பங்கேற்றன. இலங்கையில் நூறுகோடி எழுச்சி என்ற விளக்க செயலில் இளைஞர்கள் வலுவும் வர்ணமும் ஊட்டினர். இது இலங்கை குடும்பத்திட்ட சங்கததின் இளைஞர்கள் குழு பங்கேற்ற குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும். பாதுகாப்பான பாலுறவுக்கு பெண்கள் உறை (கொண்டோம்) பயன்படுத்துவது தொடர்பான இணையவழி மேம்படுத்தல் இன்னுமொரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்