இந்த பிரிவில் :
1. மார்பக பரிசோதனை - அது என்ன?
2. சுய மார்பக பரிசோதனை- நீங்கள் எப்போது தொடங்க வேண்டும்?
மருத்துவ மார்பகப் பரிசோதனைகள் உங்கள் மார்பகத்தில் ஒரு கட்டி மற்றும் கூடுதல் பரிசோதனை தேவைப்படும் பிற மாற்றங்களைக் கண்டறியலாம்.
ஒரு மருத்துவா மார்பகப் பரிசோதனை பயிற்சி பெற்ற சுகாதார வழங்குநரால் செய்யப்படுகிறது.
அதிர்வெண்
20 வயது முதல் அனைத்து பெண்களும் மாதத்திற்கு ஒருமுறை மார்பக சுய பர்சொடனையை செய்ய வேண்டும்.
மாதவிடாய் தொடங்கி ஒரு வாரத்திற்குப் பிறகு சுய-மார்பக பரிசோதனையை மேற்கொள்வது நல்லது. ( மாதவிடாய் காலத்தில், சில பெண்கள் தங்களது மார்பகங்களில் வலி மற்றும் கட்டியாக உணர்கிறார்கள்). மாதவிடாய் இல்லை என்றால், வசதியான திகதியை தேர்ந்தெடுக்கலாம்.
சுய-மார்பக பரிசோதனைக்கான படிமுறைகள்:
கண்ணாடியின் முன் நின்று இடுப்பு வரை மார்பை வெளிப்படுத்தி, கண்ணாடி ஊடாக மார்பகங்களைப் பார்க்கவும், அதே நேரத்தில் கைகளை நிலைகளில் வைத்துக் கொள்ளவும்.
கீழே குறிப்பிட்டுள்ள மாற்றங்களைக் கவனியுங்கள்:
2. படபடப்பு (படுத்தல், உட்காருதல், நிற்றல்)
தடினமான பகுதிகள் மற்றும் அல்லது கட்டிகளை அடையாளம் காண மூன்று நடுவிரல்களையும் பயன்படுத்தி மார்பகத்தை தட்டவும். விரல்களின் உள்ளங்கை மேற்பரப்புக்களைப் பயன்படுத்தவும். (மூன்று நடுவிரல்களின் தட்டையான மேற்பரப்பு). மார்பகத்தின் படபடப்பை உட்கார்ந்து அல்லது படுத்திருக்கும் நிலைகளில் செய்யலாம். வலது பக்க மார்பகத்தை பரிசோதிக்கும் போது, வலது கையை தலைக்கு மேல் உயர்த்தி , இடது கையால் வலது பக்க மார்பகத்தைத் தட்டவும். இடது பக்க மார்பகத்தை பரிசோதிக்கும் போது இடது கையை உயர்த்தி, வலது கையைப் பயன்படுத்தி இடது மார்பகத்தைப் படபடக்க வேண்டும்.
மூன்று அழுத்த நிலைகளைப் பயன்படுத்தி மார்பகத்தின் வெளிப்புற வட்டத்தில் இருந்து முலைகாம்பு நோக்கி கடிகார திசையில் மார்பகத்தை தொடர்ந்து படபடக்க வேண்டும்.
சுட்டிக்காட்டப்பட்டபடி ‘குறைந்தபட்ச’ அழுத்தத்தைப் பயன்படுத்தத் தொடங்குங்கள் ( தோலுக்கு கீழுள்ள பகுதியை உணர) மற்றும் படிப்படியாக அழுத்தத்தை அதிகரிக்கவும் (திசுவை ஆழமாக உணர). மார்பக படபடப்பின் முடிவில், கட்டைவிரல் மற்றும் நடுவிரலைப் பயன்படுத்தி ஆரோலாவை (சிற்றிடம்) அழுத்துவதன் மூலம் முலைக்காம்பில் வெளியேற்றம் உள்ளதா என்பதை கண்டறியவும்.
பின்னர் அக்குளை பரிசோதித்து கட்டிகள் உள்ளனவா என்று பார்க்கவும். மற்ற மார்பகத்தைப் பரிசோதிக்க அதே நுட்பத்தைப் பயன்படுத்தவும்.
படுத்த நிலையில் மார்பகத்தில் படபடப்பு:
வலது மார்பகத்தை படபடக்க, வலது உள்ளங்கையை தலைக்கு கீழே வைத்து, இடது கையால் மார்பகத்தை படபடக்க வேண்டும். இடது மார்பகத்தின் படபடப்புக்கு, இடது உள்ளங்கையை தலையின் கீழ் வைத்து வலது கையால் படபடக்க வேண்டும்.
சுய மார்பக பரிசோதனையின் போது ஏதேனும் அசாதாரணங்கள் கண்டறியப்பட்டால், அனைத்து மாற்றங்களும் மார்பக புற்றுநோயால் ஏற்படவில்லை என்றாலும், மருத்துவரை அணுகுவது கட்டாயமாகும்.
உங்கள் பரிசோதனைக்கான சந்திப்பை மேற்கொள்ள தொடர்புகளுக்கு FPA Sri Lanka 077 955 2979