அம்பாறை, மட்டக்களப்பு, கொக்கல, நுவரெலியா, மருதானை, கிளிநொச்சி ஆகிய இடங்களில் அமைந்துள்ள சேவை வழங்கல் நிலையங்கள் (SDPs) ஊடாக கல்வி, பயிற்சி சேவைகள் வழங்கல் ஆகியவற்றில் முதன்மை கவனம் செலுத்தும்.
கருத்திட்டத்தின் பிரதான நோக்கம் வருமாறு:
- நிலையான சேவை வழங்கும் நிலையங்கள் ஊடாக பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் என்பவற்றிற்கான அணுகுமுறையை உயர்த்துதல்.
- செயற்படுத்தும் நடவடிக்கைகள் ஊடாக தகுதியற்ற சமூகங்களுக்கு பாலியல் இனப்பெருக்க சுகாதார சேவைகளை வழங்குவதை மேம்படுத்துதல் மற்றும் பலப்படுத்துதல்.
- சேவை வழங்கலுடன் தொடர்புடைய தற்பொழுதுள்ள முறைமையை வலுப்படுத்துதல் மற்றும் பொருட் பாதுகாப்பு, முகாமைத்துவ முறைமை என்பவற்றை மேம்படுத்துதல்.
இந்நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ளுவதற்கு செயற்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் வருமாறு,
- நடமாடும் சிகிச்சை நிலையங்கள்/ வேன்கள் மற்றும் நிலையான சிகிச்சை நிலையங்கள் ஊடாக மலைநாட்டில் ஓரங்கட்டப்பட்ட சமூகங்களை (தோட்டத் தொழிலாளர்களை) அடைதல்.
- கிழக்கு மாகாணத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு சேவையாற்றுதல்.(அம்பாறை, மட்டக்களப்பு சேவை வழங்கும் நிலையங்கள்)
- புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுதல்.(மருதானை சேவை வழங்கும் நிலையம்)
- சுதந்திர வர்த்தக வலய (FTZ) ஆடைத் தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்களின் பாலியல் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு செயலாற்றுதல். (கொக்கல சேவை வழங்கும் நிலையம்) மற்றும் சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள தொழிற்சாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ள சிகிச்சை நிலையங்களுக்கு உதவுதல்.
- தொண்டர் சுகாதார உதவியாளர்கள் என்றழைக்கப்படுகின்ற இனப்பெருக்க சுகாதார மேம்பாட்டாளர்கள் (RHP) சேவை ஏற்பாடுகள் வழங்கப்படுதல்.
- பாலியல் இனப்பெருக்க சுகதார உரிமைகள் (SRHR) மீதான பிரச்சினைகள் பற்றி கற்பிப்பதற்கும் நடமாடும் சிகிச்சை நிலையங்களை அமைப்பதற்கும் வேலைசெய்யும் பிரதேசங்களில் உள்ள அரசசார்பற்ற நிறுவனங்களைப் பயன்படுத்துதல்.
- மருதானை சேவை வழங்கும் நிலையத்தின் மூலம் சேரிப்பகுதி சமூகங்களுக்காக கல்வியறிவூட்டுதல் மற்றும் சிகிச்சை நிலையங்களை நடத்துதல்.
- செய்மதி சிகிச்சை நிலையங்கள்.
- அனைத்து சேவை வழங்கும் நிலையங்களில் நடமாடும் கண்காட்சி ஊடாக இளைஞர்களுக்கும் வளரிளம்பருவத்தினருக்கும் கல்வியறிவூட்டுதல்.
- “கூர்ந்து கவனிக்கும் கல்வியாளர்களாவதற்கு” பாலியல் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் உரிமைகள் (SRHR) தொடர்பாக இளைஞர்களுக்கு கல்வியறிவூட்டுவதற்கு ஒவ்வொரு சேவை நிலையத்தில் இளைஞர் குழு இணைக்கப்பட்டுள்ளது.
எமது தொடர்ச்சியான நோக்கம் SRH, GBV(பாலியல் இனப்பெருக்க சுகாதாரம், பால்நிலை என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட வன்முறை), SGBV உபசரணை, FP, கருச்சிதைவு STI, VCT, இளைஞர் நேசமுள்ள சுகாதார சேவைகள் என்பவை தொடர்பில் சேவை வழங்குநர்களின் திறமையை உயர்த்துதல் மற்றும் ஆண்களும் பிரதான சனமும் சிகிச்சை நிலைய சேவையைப் பெறுவதை உறுதிப்படுத்துதல்.