ஆணுறைகள் மிகவும் பிரசித்தமாக இருக்கின்றன அத்தோடு எச்ஐவி(HIV) மற்றும் எஸ்டிஐ(STIs) களுக்கு எதிரான பாதுகாப்பிற்கான ஒரேயொரு கருத்தடைப் பொருட்களாக இருக்கின்றன. அவை பயன்படுத்துவதற்கு எளிதானவை மற்றும் பெற்றுக்கொள்வதற்கும் எளிதானவையே.
1. ஒரு ஆணுறை என்றால் என்ன அத்தோடு அது எவ்வாறு வேலை செய்கின்றது
2. ஆணுறைகள் எஸ்.டி.டி(STDs) க்களுக்கு எதிரான பாதுகாப்பிற்கு உதவுகின்றனவா
ஆணுறைகள் உடலுறவின் பொழுது உங்களுடைய ஆணுறுப்பை மூடுகின்ற மற்றும் விந்தை (கம்) சேகரிக்கின்ற சிறிய, மெல்லிய பைகளாகும். ஆணுறைகள் விந்தணு யோனிக்குள் நுழைவதை நிறுத்துவதன் மூலம் கர்ப்பத்தை தடுக்கின்றன, எனவே விந்தணுவுக்கு ஒரு முட்டையை சந்திக்க / சென்றடைய முடியாது.
ஆம்! நீங்கள் வாய் வழியான, குத வழியான அல்லது யோனி வழியான உடலுறவை வைத்துக்கொள்கின்ற பொழுது ஒவ்வொரு தடவையும் ஆணுறைகளை பயன்படுத்துவது பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்த்தொற்றுக்களை பெறுவதற்கான அல்லது பரப்புவதற்கான வாய்ப்புக்களை குறைப்பதற்கான சிறந்த வழியாக இருக்கின்றது. நோய்த்தொற்றுக்களை சுமக்கக்கூடிய உடலியல் திரவங்களுடனான (விந்து மற்றும் யோனி வழியான திரவங்கள் போன்றவை) தொடர்பை தடுப்பதன் மூலம் ஆணுறைகள் உங்களையும் உங்களுடைய கூட்டாளர்களையும் எஸ்டிடி(STDs) க்களிலிருந்து பாதுகாக்கின்றன.
கிடைக்கக்கூடிய விருப்பங்களை காண இங்கே கிளிக் செய்யவும்:
http://www.fpasrilanka.org/our-products?prod_category=2#products_list
Other Topics: