இந்த கருத்திட்டம் குறிப்பாக சுகாதார அமைச்சின் குடும்ப நல பணியகம் (FHB) மற்றும் தேசிய பாலுறவால் தொற்றும் நோய்கள் STD/AIDS கட்டுப்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் (NSACP) தேசிய பங்காளர்களுடன் ஒருங்கிணைந்து தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்குள் வேலைசெய்கிறது. இதன் இலக்கு: ஒருங்கிணைக்கப்பட்ட பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார மூலோபாயத்தை மேம்படுத்துதல் மற்றும் ஓரங்கட்டப்பட்ட குழுக்குளுக்கு அதாவது, பெண் பாலியல் தொழிலாளர்கள், ஆண் தன்னின புணர்ச்சியாளர்கள், கடற்கரையோர பையன்கள், போதைப்பொருள் பாவனையாளர்கள், போதைப் பொருளை ஊசிமூலம் ஏற்றிக்கொள்ளுகின்றவர்கள் போன்ற HIV தொற்றுள்ளவர்கள் எனக் கருதப்படுகின்றவர்களுக்கு தற்பொழுது வழங்கப்படுகின்ற சேவைகளை பலப்படுத்துதல். இந்த இலக்கை அடைவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளாவது:
- இந்த தகவல்களைப் பயன்படுத்தி சேவைகளை சமப்படுத்துவதற்கு நிலவுகின்ற இடைவெளிகளையும் சந்தர்ப்பங்களையும் அடையாளம் காண்பதற்கு கருத்திட்டத்தின் ஆரம்பத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட சேவைகளின் நிலையைத் துரிதமாக மதிப்பீடுசெய்தல். அத்துடன் தேசிய பங்கீடுபாட்டாளர்கள், சிவில் சமூக அமைப்புகள், உலக நிதிய வதிவிட இணைப்பாக்க பொறிமுறை என்பவற்றின் சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்ட பரிந்துரைப்பை பயன்படுத்திக்கொள்ளுதல்.
- பிரதானமாகப் பாதிக்கப்பட்ட சனத்தொகை (பெண் பாலியல் தொழிலாளர்கள், ஆண் தன்னின புணர்ச்சியாளர்கள் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்கள்,) என்பவர்களைப் பற்றி பொதுமக்களுக்கு அறிவூட்டுவதற்காக சிவில் அமைப்புகளைப் பலப்படுத்துதல், சுகாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோரின் உரிமைகள், தேசிய மற்றும் மாவடட அடிப்படையிலான பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் (SRH) மற்றும் HIV சேவைகள், PMTCT,ECS மற்றும் HIV பரவுதலைத் தடுப்பதற்காக சேவைகளை ஒருங்கிணைப்பதில் உள்ள நன்மைகள் என்பவை பற்றியும் பொதுமக்களுக்கு அறிவூட்டுதல், சிவில் அமைப்புகளுடன் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலையும் பரிந்துரை செய்வதையும் அவர்களுடைய நிறுவன பணிப்பாணையுடன் கூட்டிணைக்கப்படுதல்.
- அனைத்து பெண்கள் குழுக்களைக் கொண்டு வீதி நாடகங்களை நடத்துதல். அவர்களிடையே பெண் பாலியல் தொழிலாளர்கள் இருத்தல், ஒருங்கிணைப்பு, மனித உரிமைகள், பால்நிலை மற்றும் அவற்றுடன் சமபந்தப்பட்ட பிரச்சினைகள் போன்றவை பற்றிய நிகழ்ச்சிகளை ஒலிபரப்புதல் போன்ற புதுமையான அணுகுமுறைகளைப் பயன்படுத்துதல். இவற்றை அரச ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஒலிபரப்பு நிலையங்கள் ஊடாக ஒலிபரப்புதல்.
தேசிய மட்டத்தில் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் HIV பற்றியும் ஒரங்கிணைக்கப்பட்ட அணுகுமுறைகளின் நன்மைகள், PLWH மற்றும் பிரதானமாகப் பாதிக்கப்பட்ட சனத்தொகை என்பவைபற்றியும் மாவட்ட அடிப்படையிலான ஊடகவியலாளர்களை வலுப்படுத்துதல்.
- பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் (SRH) HIV ஒருங்கிணைப்பு மற்றும் சேவைகள் தொடர்பாக இளைஞர்கள் தலைமையிலான மதியுரைக்கு உதவுவதற்கு இளைஞர் வலையமைப்பொன்றை உருவாக்குதல்.
- இலங்கையில் ஒருங்கிணைக்கப்பட்ட சேவைகளுக்காக அதிக நன்கொடைகளைப் பெறுவதற்கு உலக நிதியம்/ ஏனைய நன்கொடை அமைப்புகள் என்பவற்றிற்கு சமர்ப்பிப்பதற்கு முன்மொழிவுகளையும் எண்ணக்கரு குறிப்புகளையும் விருத்திசெய்வதற்கு சிவில் சமூக அமைப்புகளின் (CSO) திறமைகளையும் வினைத்திறனையும் கட்டியெழுப்புதல்.
- அனைவரும் சுகாதாரமாக இருப்பதற்கான உரிமையை அனுபவிப்பதற்கு பாகுபாடற்ற களங்கமற்ற சமுதாயமொன்றை உருவாக்குவதற்கு தகுந்த சட்ட மற்றும் கொள்கை சீர்திருத்தத்தைப் பரிந்துரைத்தல்.
- பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் (SRH) HIV உலகின் பல்லின மொழி நிபுணர்களைக் கொண்ட தொழில்நுட்ப குழு, ஒருங்கிணைப்பு, பால்நிலை மற்றும் உலக நிதிய பொறிமுறை இந்த கருத்திட்டத்தை வெற்றிகரமாக நாட்டின் அனைத்து மக்களையும் சென்றடையச் செய்துள்ளது. அவர்கள் மத்தியில் போரினாலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள், பிரதானமாகப் பாதிக்கப்பட்ட மக்கள், இளைஞர்கள், பெண்கள் ஆகியோர் அடங்குகின்றனர். இக் கருத்திட்டம் ஏனையோருடன் சுகாதாரம், கல்வி, சமூக சேவைகள், மாவட்ட அடிப்படையிலான ஊடகம், பெண்களும் ஊடக கூட்டமைவு போன்ற பிரதான செயற்பாட்டு அமைப்புகள், பெண்களின் சுகாதாரம்பற்றிய இலங்கை மருத்துவ சங்க நிபுணர்கள் குழு, தனியார் சுகாதார துறை மற்றும் பாதுகாப்பு படைகள் என்பவற்றைச் சேர்ந்த பங்கீடுபாட்டாளர்கள் பங்காளர்களாக இருக்கின்றனர். ஐரோப்பிய யூனியன் / SARO மத்திய கருத்திட்டம் 2013 யூன் மாதம் மீளாய்வு செய்யப்பட்டது. அதில் இலங்கை கருத்திட்ட வரிசையில் 5இல் 4 பரிந்துரை செய்யப்பட்டு சிறந்த நடவடிக்கைகளாக பிராந்திய நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட/ ஏற்றுக்கொள்ளப்படாதவைகள் இலங்கையில் இருந்தன. அண்மையில் பேங்கொக்கில் நடந்து முடிந்த சிவில் சமூக அமைப்பின் கூட்டத்தில் ஐரோப்பிய யூனியன் கருத்திட்டம் இலங்கையில் மூன்றரை வருட பயணம் வெற்றிகரமாக அமைந்தததை எடுத்துக்காட்டியது. கருத்திட்ட காலப்பகுதியில் பணிகளில் ஈடுபட்ட சிவில் சமூக அமைப்புகளுடன் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நற்பணிகள், கருத்திட்டத்தினால் முன்வைக்கப்பட்ட JEC உபகரணங்கள் மற்றும் நன்கொடை பெறுபவர்கள் போன்ற விபரங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. பேங்கொக்கில் ஐரோப்பிய யூனியன் தூதுவர்களின் தலைவர்கள் உட்பட பல பார்வையாளர்கள் இலங்கை கூட்டத்தில் இருந்தனர்.