There are many variations of passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected humour, or randomised words which don't look even slightly believable. If you are going to use a passage of Lorem Ipsum, you need to be sure there isn't anything embarrassing hidden in the middle of text. All the Lorem Ipsum generators on the Internet tend to repeat predefined chunks as necessary, making this the first true generator on the Internet.
Sub title
Top sub title
Newsletter category
Article 2 image row
Image
Title
Mrs. Sylvia Fernando
Sub title
Bottom subtitle
Body
சிலோன் குடும்பத்திட்டச் சங்கம் என்ற பெயரில் அன்று அறியப்பட்ட, குடும்பத் திட்டமிடல் அமைப்பு, இலங்கையின் ஸ்தாபகராக திருமதி. சில்வியா பெர்னாண்டோ அவர்கள் விளங்குகின்றார். மிகுந்த சவாலான சூழலில் குடும்பத் திட்டமிடல் அமைப்பை யதார்த்தமாக்கியதில் முன்னோடியாக அவர் திகழ்கின்றார். தன்மையில் கூருணர்வு மிக்க அம்சம் ஒன்றை பிரதான விடயப்பரப்பாக கொண்ட அமைப்பினை ஆரம்பிப்பது எளிதான விடயமல்ல. சிக்கல் நிறைந்த மற்றும் விலக்கப்பட்ட விடயம் ஒன்று தொடர்பில் நிகழ்ச்சி ஒன்றை ஆரம்பிப்பது இயலாத மற்றும் சவால் நிறைந்த விடயமாக இருந்தது. திருமதி. சில்வியா அவர்களின் பொறுமையும், முகத்தில் எப்போதும் தவழும் புன்னகையும் அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்றன. உறுதியான ஒரு வாசகம் அனைத்து சிக்கல்களையும் தீர்ப்பதாக அமைந்திருந்தது. ஒவ்வொருவரிடமும், இன்னொருவர் கற்றுக் கொள்ளக் கூடிய தமக்கான தனித்துவமான அனுபவங்கள் இருக்கும் என்பதால், அனைவருக்கும் செவிமடுப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படல் வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அத்துனை கருணையான மற்றும் ஏனையோர் மீது அன்பு செலுத்தும் மனப்பாங்கினை அவர் கொண்டிருந்தார். தம்மிடம் உள்ளதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டது மாத்திரமன்றி, அனைவரும் ஒருவருக்கு ஒருவர் இதே எண்ணத்தை கொண்டிருக்க வேண்டும் என அவர் விரும்பினார்.
Image
Title
DR. மேரி ரட்ணம்
Body
கனடாவைச் சேர்ந்த பெண்நோயியல் நிபுணரான இவர், குடும்பச் சுகாதரத்தில் முன்னோடியாக திகழ்ந்தார். குடும்ப நலன்புரி அமைப்பை ஆரம்பித்த Dr. ரட்ணம் அவர், பெண்களுக்கான பல பயனுள்ள அமைப்புக்களை ஆரம்பித்தார். லங்கா மகில சமித்தி மற்றும் சிலோன் குடும்பத்திட்டச் சங்கம் என்பன அவற்றில் குறிப்பிடத்தக்க சாதனையாகும். மகப்பேற்று சுகாதாரம், குழந்தைகளுக்கு தரமான பால், அவர்களின் தார்மீக மற்றும் உடல்சார் நலன்கள் என்பவற்றின் முன்னேற்றம் சார்ந்த விடயங்களை அடையாளம் காண்பது தொடர்பிலும், விருத்தி செய்வது தொடர்பிலும் அவர் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்.
1930களின் ஆரம்பத்தில், இலண்டனில் அமைந்துள்ள பிறப்பு கட்டுப்பாட்டு சர்வதேச தகவல் நிலையத்துடன் தொடர்பினை ஏற்படுத்திய Dr. ரட்ணம் அவர்கள், அதன் கௌரவ பணிப்பாளர் திருமதி. எடித் ஹவி-மார்டின் 1936ஆம் ஆண்டு தை மாதத்தில் உலகச் சுற்றுலாவின் ஒரு கட்டமாக இலங்கை வந்தபோது, இலங்கையில் குடும்பத் திட்டமிடல் சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கான களமாக அமைந்தது.
ஒரு வருடத்தின் பின்னர், கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் Dr. ரட்ணம் மற்றும் மருத்துவ நிபுணர்களின் குழுவொன்று கொழும்பில் சிகிச்சை நிலையம் ஒன்றை ஆரம்பித்தது. எனினும், இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஏற்பட்ட கப்பல் ஏற்றுமதி தொடர்பான சிக்கல்களின் காரணமாக இந்த சிகிச்சை நிலையத்தை மூடிவிட நேர்ந்தது. சுதந்திரத்திற்குப் பின்னர் பெண்களின் நிலைமையில் எதுவித மாற்றமும் ஏற்படவில்லை. எனவே, பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு சிறந்த உலகை உருவாக்க வேண்டும் என்ற நோக்கினை மாத்திரம் கொண்டதாக குடும்பத் திட்டமிடல் அமைப்பு மீண்டும் உருப்பெற்றது.
இந்த சந்தர்ப்பத்தில் திருமதி. சில்வியா பெர்னாண்டோவின் குடும்பத் திட்டமிடல் அமைப்பு குறித்த ஆதரவினையும் Dr. ரட்ணம் பெறுகின்றார். 1953ஆம் ஆண்டு தை மாதம் நடைப்பெற்ற, சிலோன் குடும்பத்திட்டச் சங்கத்தின் அங்குரார்ப்பண கூட்டத்தில், Dr. ரட்ணம் அவர்கள் முதலாவது தலைவராக தெரிவானார்.
புதிய அமைப்பு உருவானதுடன் செயலிழந்த குடும்ப நலன்புரிச் சங்கத்தின் யாப்பின் அடிப்படையில் இந்த அமைப்புக்கான யாப்பு உருவாக்கப்பட்டது. அத்துடன், குடும்ப நலன்புரிச் சங்கத்தின் வங்கிக் கணக்கில் எஞ்சியிருந்த பணத்தை, FPA ஸ்ரீ லங்காவின் கணக்கிற்கு மாற்றுவதற்கு Dr. ரட்ணம் ஒழுங்குகளை மேற்கொண்டார்.

பேராசிரியர். சி. சி. டீ சில்வா
Body
1956ஆம் ஆண்டு முதல் 1958ஆம் ஆண்டு வரையும், மீண்டும் 1976ஆம் ஆண்டு முதல் 1977ஆம் ஆண்டு வரையும் குடும்பத் திட்டச் சங்கத்தின் தலைவராக பேராசிரியர். சி. சி. டி. சில்வா விளங்கினார். நிறைவேற்றுக் குழு, தேசிய பேரவை மற்றும் மருத்துவ பேரவையின் உறுப்பினர் என்ற வகையில், FPA ஸ்ரீ லங்காவினை தொடர்ந்த வருடங்களில் முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அவர் பெரும் பங்காற்றினார். கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களின் குழந்தை நோயியல் தொடர்பான பேராசிரியராக விளங்கிய இவரது, சர்வதேச அங்கீகாரம், நிறுவனத்திற்கு அங்கீகாரத்தைப் பெற்று தந்ததுடன், தேசிய மற்றும் சர்வதேச அரங்கில் ஆதரவு பெறுவதற்கு வழிவகுத்தது.
எவ்வாறாயினும், பெண்கள் மற்றும் சிறுவர்களின் நலனே அவரது பிரதான அக்கறையாக விளங்கியது. இதன் காரணமாக குடும்பத் திட்டமிடல் சார்ந்த அம்சங்களில் அவர் ஆர்வத்துடன் பங்காற்றினார். 1960களின் ஆரம்பத்தில், கொழும்பு, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் ஊட்டச்சத்து சிகிச்சை நிலையத்துடன் இணைந்ததாக குடும்பத் திட்டமிடல் சிகி்ச்சை நிலையம் ஒன்றை பேராசிரியர். டி சில்வா ஆரம்பித்தார். சிறுவர் பராமரிப்பு தொடர்பான ஆலோசனை பெறுவதற்காக மாத்திரமல்லாது, தமது குடும்பத்தை திட்டமிடுவது தொடர்பிலும் தாய்மாருக்கு உதவும் வகையில் அதன் சேவைகள் அமைந்திருந்தன. அத்துடன், பொல்வத்தை புனித மைக்கல்ஸ் மற்றும் ஒருவல ஸ்டீல் கோப்பரேஷன் ஆகியவற்றின் மகப்பேற்று, சிறுவர் பராமரிப்பு மற்றும் குடும்பத் திட்டமிடல் சிகிச்சை நிலையங்களில் பேராசிரியர் டி சில்வா அவர்கள் தன்னாவர் பணியை மேற்கொண்டார்.

திருமதி. லெய்லா பஸ்னாயக்க
Body
சுமார் 40 வருடங்களுக்கும் அதிகமான காலம் அமைப்பிற்காக தன்னார்வ அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களில் ஒருவராக திருமதி. பஸ்னாயக்க விளங்குகின்றார். தேசிய குடும்பத் திட்டமிடல் முன்னேற்பாடுகளுக்கு பாரிய பங்களித்தவராகவும் அவர் விளங்குகின்றார். 1953ஆம் ஆண்டில் Dr. புளோரன்ஸ் ராம் அளுவிகாரே அவர்களினால், இந்த அமைப்பில் இணைவதற்கு தமக்கு எவ்வாறு தூண்டுதல் அளிக்கப்பட்டது என்பது குறித்து, ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரான திருமதி. பஸ்னாயக்க அவர்கள் நினைவு கூறுகின்றார். 1977ஆம் ஆண்டில், ஸ்ரீலங்கா குடும்பத்திட்டச் சங்கத்தின் தெரிவு செய்யப்பட்ட தலைவரான திருமதி. பஸ்னாயக்க அவர்கள், தொடர்ந்து மூன்று வருடங்கள் அந்த பதவியை வகித்தார். அவரது பதவிக் காலத்தின் போது 1978ஆம் ஆண்டு அமைப்பின் வெள்ளிவிழா அனுஷ்டிக்கப்பட்டது. குடும்பத் திட்டச் சங்கத்தின் உருவாக்கத்தில் பிரதான பங்களித்த, திருமதி. பஸ்னாயக்க அவர்கள், இளைய தலைமுறைக்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டலை வழங்கும் சிரேஷ்ட ஆலோசகராக விளங்குகின்றார்.
இவரும், திருமதி. பீளிஸ் திசாநாயக்க அவர்களும், தேசியப் பேரவையின் கௌரவ ஆயுள் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டதுடன், அமைப்பின் அறங்காவலர்களாக செயற்படுகின்றனர். IPPF இன் இந்து சமுத்திர பிராந்திய பேரவையின் உறுப்பினராகவும் திருமதி. பஸ்னாயக்க அவர்கள் விளங்குகின்றார். சொய்சா மகப்பேற்று வைத்தியசாலையில் 1953ஆம் ஆண்டு புரட்டாசி மாதத்தில் முதலாவது குடும்பத் திட்டச் சங்கத்தின் சிகிச்சை நிலையம் ஆரம்பிக்கப்பட்டது முதல், அதன் அபிவிருத்திக்காக கடுமையாக உழைத்தவர்களில் திருமதி. பஸ்னாயக்க அவர்களின் பங்களிப்பு முக்கியமானது. அவரது பல்வகையான வகிபாகமானது அமைப்பின் இன்றைய வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியது என்றால் மிகையாகாது.

DR. சிவா சின்னத்தம்பி
Body
ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராக இல்லாத போதிலும், புதிதாக உருவாக்கப்பட்ட குடும்பத் திட்டச் சங்கத்தின் தன்னார்வ வைத்தியராக இணைந்து, ஆரம்ப முன்னோடிகளில் ஒருவராக Dr. சிவா சின்னத்தம்பி சிறப்பிடம் பெறுகின்றார். Dr. மேரி ரட்ணம், பேராசிரியர் சி.சி.டி.சில்வா, பேராசிரியர். டி.ஏ. ரணசிங்க, Dr. (திருமதி) எல்.ஓ. அபேரத்ன, Dr. பி.ஆர். தியாகராஜா, Dr. புளோரன்ஸ் ராம் அளுவிகாரே, திருமதி. சில்வியா பெர்னாண்டோ, திருமதி எஷ்லின் தெரணியகல மற்றும் ஏனையோருடன் இணைந்து, குடும்பத் திட்டமிடல் செயற்பாட்டில் அவர் பெரும் பங்காற்றினார்.
டி சொய்சா மகப்பேற்று வைத்தியசாலையில் FPA ஸ்ரீ லங்காவின் முதலாவது சிகிச்சை நிலையத்தில் Dr. புளோரன்ஸ் அளுவிகாரவுடன் தன்னார்வ வைத்தியராக இணைந்த போது, திருமணமாகி பல வருடங்களாக குழந்தைப் பேறு இன்றி தவிக்கும் தம்பதிகளுக்கு குழந்தைப் பெற்றுக் கொள்வதற்கு உதவும், கருவளம் சார்ந்த சிகிச்சையை Dr. சிவா சின்னத்தம்பி அவர்கள் கோரி பெற்றுக் கொண்டுள்ளார்.
1958ஆம் ஆண்டில் அமைப்பின் உப தலைவராகவும், தேசிய பேரவையின் உறுப்பினராகவும் அவர் தெரிவு செய்யப்பட்டார். இறுதியில், சிகிச்சை சார் நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் பொறுப்பான கௌரவ வைத்திய பணிப்பாளராக அவர் நியமிக்கப்பட்டார். குடும்பத் திட்டமிடல் தொடர்பில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த Dr. சிவா சின்னத்தம்பி அவர்கள், பெண்களின் ஆரோக்கியம் அல்லது வாழ்க்கையில் குடும்பத் திட்டமிடல் அம்சங்கள் ஆபத்து ஏற்படுத்தி விடக்கூடாது என்பதனை உறுதி செய்வதற்கான ஆய்வுகளிலும் அவர் ஈடுபட்டார்.
1960ஆம் ஆண்டு புரட்டாசி மாதத்தில் Dr. ஜி.ஆர். வெனிங் அவர்களின் வழிகாட்டலில், இராகம வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட சிகிச்சை சார் பரிசோதனைகளுடன் வாய்மூல கருத்தடை முறைகள் பயன்பாடு குறித்த மூன்று வருட கற்கையை Dr. சிவா சின்னத்தம்பி அவர்கள் ஆரம்பித்தார். உட்செலுத்தும் கருத்தடை சாதனத்தின் (Intra Uterine Device – IUD) பயன்பாடு தொடர்பில் சிகிச்சை சார் பரிசோதனைகளிற்கான 1963ஆம் ஆண்டு நடைபெற்ற ஆய்விலும் Dr. சிவா சின்னத்தம்பி அவர்கள் முன்னிலையில் நின்றார். அத்துடன், 1967ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நீண்ட காலம் பயனளிக்கக் கூடிய ஊசி மூலமான டெபோ புரெவெரா (Depo Provera) கருத்தடை மருந்து தொடர்பான ஆய்விலும் அவர் பங்குபெற்றிருந்தார்.

DR (MRS) L O ABEYRATNE
Body
Ref : FPA Sri Lanka 25th Anniversary Souvenir
Title
PROFESSOR O E R ABHAYARATNE
Body
Ref : FPA Sri Lanka 25th Anniversary Souvenir
Title
MR C T ADAMS
Body
Ref : FPA Sri Lanka 25th Anniversary Souvenir
Title
DR. (MRS) F K RAM ALUVIHARE
Body
Ref : FPA Sri Lanka 25th Anniversary Souvenir
Title
DR. V AMIRTHALINGAM
Body
Ref : FPA Sri Lanka 25th Anniversary Souvenir
Title
MRS AMIRTHALINGAM
Body
Ref : FPA Sri Lanka 25th Anniversary Souvenir
Title
MRS C COREA
Body
Ref : FPA Sri Lanka 25th Anniversary Souvenir
Title
MRS E DERANIYAGALA
Body
Ref : FPA Sri Lanka 25th Anniversary Souvenir
Title
MRS MURIEL DE ZOYSA
Body
Ref : FPA Sri Lanka 25th Anniversary Souvenir
Title
MRS E C FERNANDO
Body
Ref : FPA Sri Lanka 25th Anniversary Souvenir
Title
MAJOR T F JAYAWARDENE
Body
Ref : FPA Sri Lanka 25th Anniversary Souvenir
Title
DR. A F OUTSCHOORN
Body
Ref : FPA Sri Lanka 25th Anniversary Souvenir
Title
DR. P R THIAGARAJAH